ரஜினியின் ஆயுட்கால கைதிகள் நாங்கள்! சிறைவாசிகள் போல் வேடமணிந்து 'ஜெயிலர்' படம் பார்த்த ரசிகர்கள்! வீடியோ

By manimegalai a  |  First Published Aug 10, 2023, 5:45 PM IST

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தை ஆயுள் கைதிகள் போல வேடமணிந்து திரையரங்கிற்கு வந்து படம் பார்த்த ரசிகர்களின் சுவாரஸ்ய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 


இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 169வது திரைப்படமாக உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் இன்று காலை வெளியானது. உலகம் முழுவதும் வெளியான ஜெயிலர் படத்தை  ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், மற்ற ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கியும்,  ஆரவாரத்தோடு ஒரு திருவிழாவை போல் வரவேற்றனர்.

இந்நிலையில் சில ரசிகர்கள் மதுரை ரயில்வே நிலையம் அருகேயுள்ள உள்ள தங்க ரீகல் திரையரங்கில் 'ஜெயிலர்' திரைப்படம் பார்க்க ஆயுள்கால ஜெயில் கைதிகள் போல் வேடமணிந்து வந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேலும் ரஜினி சிறை வாசியாக நடித்த கேரக்டரில் அவருக்கு கொடுக்கப்பட்ட 786 போன்ற எண்கள், அவர் பிறந்த 12 12, அவரின் பிறந்த ஆண்டு, அவர் திரையுலகில் அறிமுகமான வருடம் போன்ற எண்கள் பொறிக்கப்பட்ட உடைகளை அவர்கள் அணிந்திருந்தனர்.

Tap to resize

Latest Videos

கிழிந்த பாவாடையில் ஆட்டம் போட்ட தமன்னா! புது பாவாடை வாங்கிக்கொண்டு 'ஜெயிலர்' படம் பார்க்க வந்த பிரபலம்!

பிரமாண்ட கேக் வெட்டி 'ஜெயிலர்' படத்தை வரவேற்ற இவர்கள், பொதுமக்களுக்கும் ரசிகர்களுக்கும் அதனை வழங்கினர். இப்படி ஆயுள் கைதிகள் போல் வந்தது குறித்து அந்த ரசிகர்கள் செய்தியாளர்களிடம் பேசும் போது, ரஜினியின் ஆயுள்கால ரசிகர்கள் நாங்கள் என்பதை தெரிவிக்கும் விதமாகவே, ஆயுள் சிறைவாசி போல வந்ததாக தெரிவித்தனர்.

பகை உணர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.! 'ஜெயிலர்' படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் பரப்படுகிறதா? வெடித்த பஞ்சாயத்து!

மதுரை மட்டும் இன்றி, உலக முழுவதும் ஜெயிலர் படத்தை ரசிகர்கள் பிரமாண்டமாக வரவேற்றனர். அண்டை மாநிலங்களான, கர்நாடகா, ஆந்திரா போன்ற இடங்களில் அதிகாலை 6 மணிக்கே ஜெயிலர் திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் அரசு அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்காததால், 9 மணிக்கே முதல் காட்சி போடப்பட்டது. மேலும் தொடர்ந்து 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

click me!