
கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஹர ஹர மஹாதேவகி. அடல்ட் காமெடியாக உருவான இத்திரைப்படம் ரசிகர்களை மிகவும் குஷிப்படுத்தியது.
இந்நிலையில், மீண்டும் சந்தோஷ் பி ஜெயக்குமாரின் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் படத்திற்கு இருட்டு அறையில் முரட்டு குத்து என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தையும் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடிக்கிறார். இவர் தவிர இன்னும் இரண்டு ஹீரோயின்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்தப் படத்திலிருந்து பார்ன் ஆந்தம் வெளியாகி ஹிட்டானது. அதில் நடித்த கவர்ச்சி நடிகைகளையும் சுசி லீக்ஸ் கலாய்த்து இருந்தது.
இந்நிலையில் மூன்றாவது முறையாக ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் பேனர் தயாரிக்கும் படத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கவிருக்கிறார். படத்திற்கு தேவர் ஆட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை ஆக்சன் சென்டிமென்ட் படங்களான குட்டி புலி, கொம்பன், மருது மற்றும் கொடி வீரன் ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்குகிறார். அதனால் இந்தப் படமும் சென்டிமென்ட் சார்ந்த கதையாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.