எம்.ஜி.ஆரின் மனைவியாக நடிக்கும் 'கபாலி' நடிகை..!

 
Published : Jan 18, 2018, 06:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
எம்.ஜி.ஆரின் மனைவியாக நடிக்கும் 'கபாலி' நடிகை..!

சுருக்கம்

rithvika acting mgr wife janaki character

எம்.ஜி.ஆர்.,  ‘உலகம் சுற்றும் வாலிபன்' படத்தைப் போலவே முழுவதும் வெளிநாட்டில் ஒரு படத்தை இயக்கி நடிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் எம்.ஜி.ஆர்.,  அரசியல் வாழ்க்கையில் முழுவதும் ஈடுபட்டதால் அது நிறைவேறாமல் போனது.

இவருடைய கனவை நனவாக்கும் விதத்தில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் 'கிழக்கு தென்னாப்பிரிக்காவில் ராஜு' என்கிற படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் காட்சிகள் முழுவதும் அனிமேஷன் முறையில் எடுக்கப்பட உள்ளது. இந்தப் படத்தின் பூஜை எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று போடப்பட்டது, இதில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்துகொண்டனர்.

இதே போல், எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஒன்றும் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் சதீஷ்குமாரும், அறிஞர் அண்ணா வேடத்தில் எஸ்.எஸ்.ஸ்டான்லியும் நடித்து வருகின்றனர்.

இயக்குனர் பாலகிருஷ்ணா இயக்கி வரும் இந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி கதாபாத்திரத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகளிடம்  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது 'மெட்ராஸ்' , 'கபாலி', ஆகிய படங்களில் நடித்த நடிகை ரித்விகா  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தில் நடிப்பது குறித்து அவர் கூறுகையில், எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி அம்மாளின் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது. 

இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க தயாராகி வருகிறேன் என்றும் இதனால் எம்.ஜி.ஆரை திருமணம் செய்வதற்கு முன்பு ஜானகி அம்மாள் நடித்த படங்களைப் பார்த்து அவருடைய பாணியை மனதில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்றும்   கூறியுள்ளார். ரித்விகா  சம்பந்தப்பட்ட காட்சிகள் இந்த மாதம் படமாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?