
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகீத் கபூர் நடித்துள்ள படம் பத்மாவத். முதலில் பத்மாவதி என்றிருந்த இப்படத்தின் பெயர் சமீபத்தில் டைட்டில் மாற்றப்பட்டு, பத்மாவத் என்கிற பெயரில் வருகிற ஜனவரி 25 ம் தேதி வெளியாகிறது.
இந்த படம் வருவதற்குள்ளாகவே பல சரச்சைகளுக்கு உள்ளானது.
சித்தூர் ராணி பத்மாவதி பற்றியும் அவளுடைய அழகில் மயங்கி அவளை அடைய துடிக்கும் அலாவுதீன் கில்ஜி என்ற முகலாய மன்னன் பற்றிய கதையை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதில் பத்மாவதியாக தீபிகா படுகோனேவும், கொடூர வில்லன் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும், பத்மாவதியின் கணவனான மஹர்வால் ரத்தன் சிங் கதாபாத்திரத்தில் ஷாகீத் கபூரும் நடித்துள்ளனர்.
இதில் பத்மாவதியை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி ராஜ்புத் சமூகத்தினர் பலவேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
உச்சகட்டமாக தீபிகாவின் தலைக்கு விலையும் பேசப்பட்டது. தீபிகாவிற்கு கொலை மிரட்டல்களும் வந்தன. இதனால் அவரின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இந்நிலையில் பல்வேறு காட்சிகளை நீக்கும் உத்தரவுடன் சென்சார் போர்டு இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழை அளித்தது.
அதே நேரத்தில் இந்த படத்தை வெளியிடுவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது .குஜராத், ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநிலங்களில் இப்படத்தை திரையிடப்போவதில்லை என அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
இது இப்படி இருக்க இந்த படத்தின் தயாரிப்பாளர்களான அஜித் அந்தாரே மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ஒரு வழக்கு தொடர்ந்துள்ளனர். சென்சார் போர்டு இப்படத்தை வெளியிட அனுமதித்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள தடையை, நீக்க வேண்டும் என தங்களது மனுவில் கோரியுள்ளனர். இந்த மனுவை ஏற்று கொண்ட உச்ச நீதிமன்றம், விரைவில் இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவிருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.