தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தாயாருக்கு ஆளுநர் விருது வழங்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்கிற இடத்தை எட்டிப்பிடித்திருக்கும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின், தாயார் நாகமணிக்கு... ஆளுநர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சன் டிவியில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, சிறு சிறு வேடங்களில் நடித்து பிரபலமாகி... தற்போது கதையின் நாயகியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார். அடுத்தடுத்த பல முன்னணி ஹீரோக்களுடனும் , அழுத்தமான கதைக்களங்களிலும் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டன் ராஜேஷும், சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையில் ஹீரோவாக நடிக்க துவங்கி விட்டார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் திரையுலகில் சாதிக்க பட்ட கஷ்டங்கள் கொஞ்சம்... நஞ்சம் இல்லை. கல்லூரியில் படித்துக்கொண்டு, தன்னுடைய குடும்பத்தை பார்த்துக்கொள்வதற்காக, பெரிய, பெரிய மால்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட் முன் நின்று விளம்பர தாள்களை விநியோகம் செய்துள்ளதாக அவரே கூறியுள்ளார்.
இன்று ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த முன்னணி இடத்தை பிடிக்க, மிகவும் உறுதுணையாக இருந்தவர் அவரின் தாயார் நாகமணி தான். தன்னுடைய மகளை சுதந்திரமாக செயல்பட வைத்தவர். இப்போதும் மகள் மற்றும் மகன் என இருவரின் கெரியர், பர்சனல் என அனைத்து விதமான விஷயங்களிலும் பங்கெடுத்து அவரைகளை வழிநடத்தி செல்கிறார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் தாயாரை சிறப்பிக்கும் விதமாக, அவருக்கு ஆளுநர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது மகளிர் தினத்தை முன்னிட்டு மே 14 ஆம் தேதி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்து.