மாநாடு போல் மாஸ் காட்டினாரா வெங்கட் பிரபு?... கஸ்டடி படம் எப்படி இருக்கிறது? - முழு விமர்சனம் இதோ

By Ganesh AFirst Published May 12, 2023, 9:46 AM IST
Highlights

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ரிலீஸ் ஆகி இருக்கும் கஸ்டடி படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாகி உள்ள திரைப்படம் கஸ்டடி. தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி உள்ள இப்படத்தில் நாக சைதன்யா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும், வில்லனாக அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். கஸ்டடி படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து உள்ளனர். 

கஸ்டடி திரைப்படம் இன்று தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. தமிழ்நாட்டில் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படாவிட்டாலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இப்படத்திற்கு அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன. இதனால் காலை முதலே அப்படத்தை பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் தங்களது விமர்சனத்தை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதனை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... 6-ஆம் வகுப்பு படிக்கும் போதே அந்த கிரிக்கெட் வீரரை காதலித்தேன்! ஐஸ்வர்யா லட்சுமி மனதை கொள்ளையடித்த வீரர் யார்?

படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “நாக சைதன்யா தமிழ் ஸ்டைலில் வித்தியாசமாக முயற்சி செய்துள்ளார். திரைக்கதை மெதுவாக நகர்கிறது. ஆங்காங்கே சில நல்ல காட்சிகள் உள்ளன. அரவிந்த் சாமியில் ரோல் பெரிய அளவு சோபிக்கவில்லை. காமெடி மோசம். இசையும் பழசாக உள்ளது. கீர்த்தி ஷெட்டி லக் இல்லாத ஹீரோயினாக தொடர்கிறார். பொறுமையை சோதிக்கும் படமாக உள்ளது. ஓடிடியில் வேண்டுமானால் இப்படத்தை பார்க்கலாம்” என பதிவிட்டுள்ளார்.

tries different in this average film in Tamil style.Slow screenplay with rare highs. Arvindswamy role not up to mark. Comedy is silly.Music outdated. continues her unlucky spree.Bore to test patience
Watchable on OTT soon pic.twitter.com/jD3CuS3vuq

— Aparna bedi (@appurant)

மற்றொரு பதிவில், கஸ்டடி டீசண்ட் ஆன படமாக உள்ளது. பாடல்கள் மற்றும் முதல் 30 நிமிடங்கள் தான் படத்தின் மைனஸ். காமெடி சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. திரைக்கதை விறுவிறுப்பாக உள்ளது. நாக சைதன்யா சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார். யுவனின் பின்னணி இசை சில இடங்களில் நன்றாக உள்ளது. ஆனால் பாடல்கள் மோசம்” என குறிப்பிட்டுள்ளார்.

Overall is a decent watch minus the songs & first 30 mins 👍

- Comedy Worked in parts
- Screenplay is racy 💯
- did great job 👏
- Yuvans BGM is 🔥in parts followed by worst songs 🤮

Better film for Akkineni Fans in recent times ! https://t.co/inTC9zsdwD

— ᐯK👾 (@vamsixplores)

படம் குறித்து நெட்டிசன் போட்டுள்ள மற்றொரு டுவிட்டில்,  “கஸ்டடி சிறப்பாக எழுதப்பட்டுள்ள விறுவிறுப்பான திரில்லர். நாக சைதன்யாவும், அரவிந்த் சாமியும் சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளனர். படம் ஆரம்பத்தில் டல் அடிக்கிறது. ஆனால் 30 நிமிடத்திற்கு பின் பிக்-அப் ஆகிறது என குறிப்பிட்டு உள்ளார்.

A well writted and executed racy thriller which has spellbound performaces by lead cast. excelled in his role with superb ease and so as .Film looks lag at initial portions but picks up in 30 min.But overall its 2.75/5. pic.twitter.com/U4i1qynH6z

— Maddy Review (@MaddyBuntYY)

மற்றொருவர் போட்டுள்ள பதிவில், “கஸ்டடி தமிழ் நடிகர்களை வைத்து தமிழ் பிளேவரில் எடுக்கப்பட்டுள்ள தெலுங்கு படம். படத்தில் மிகவும் மோசமாக இருப்பது இசை தான். நிறைய காட்சிகள் பொறுமையை சோதிக்கும் வாகையில் உள்ளன. பேசாம நாக சைதன்யா தெலுங்கு இயக்குனர்களை தேர்வு செய்து நடிக்கலாம்” என பதிவிட்டுள்ளார்.

is a telugu film with most tamil actors and flavor. Music is the worst part in the movie and too many lag scenes.Better chay to select telugu directors.

— Gowtham Reddy (@gowthamreddy25)

படம் குறித்து நெட்டிசன் போட்டுள்ள டுவிட்டில், “மொத்தத்தில் கஸ்டடி மிகவும் சராசரியான ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சில காட்சிகளுடன் கூடிய சுவாரசியமான கதைக்களம் சில இடங்களில் வேலை செய்தாலும். பெரும்பாலான இடங்களில் டல் அடிக்கிறது. பல இடங்களில் திரும்பத் திரும்ப வரும் ஆக்‌ஷன் காட்சிகளால் படம் சோர்வை ஏற்படுத்துகிறது. பின்னணி இசை ஓகே தான் ஆனால் பாடல்கள் மோசம்” என குறிப்பிட்டுள்ளார்.

Overall a Below Par Action Thriller!

Interesting plot point with a few well designed scenes that work but the rest is tiresome. Film is dragged in many places with repetitive actions scenes and narrated in a flat way. BGM is ok but songs are awful.

Rating: 2.25/5

— Venky Reviews (@venkyreviews)

இதையும் படியுங்கள்... அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்துக்காக மிகவும் கம்மி சம்பளம் வாங்கிய அனிருத் - காரணம் என்ன?

click me!