பாலாவின் ‘வர்மா’வுக்கு நோ சொன்ன கவுதம் மேனன்... அடுத்து இயக்கவிருக்கும் படம் இதுதான்...

Published : Feb 13, 2019, 12:35 PM ISTUpdated : Feb 13, 2019, 01:07 PM IST
பாலாவின் ‘வர்மா’வுக்கு நோ சொன்ன கவுதம் மேனன்... அடுத்து இயக்கவிருக்கும் படம் இதுதான்...

சுருக்கம்

சூர்யா, ஜோதிகா, கவுதம் வாசுதேவ மேனன் ஆகிய மூவரையும் அடுத்த லெவலுக்கு கொண்டு சென்ற ‘காக்க காக்க’ படத்தின் பார்ட் 2 வை மீண்டும் அதே காம்பினேஷனில் துவங்கவிருப்பதாக தயாரிப்பாளர் எஸ். தாணு அறிவித்திருக்கிறார்.

சூர்யா, ஜோதிகா, கவுதம் வாசுதேவ மேனன் ஆகிய மூவரையும் அடுத்த லெவலுக்கு கொண்டு சென்ற ‘காக்க காக்க’ படத்தின் பார்ட் 2 வை மீண்டும் அதே காம்பினேஷனில் துவங்கவிருப்பதாக தயாரிப்பாளர் எஸ். தாணு அறிவித்திருக்கிறார்.

‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’,’துருவ நட்சத்திரம்’ மற்றும் மறைந்த  முதல்வர் ஜெயலலிதா குறித்த வெப் சீரிஸ் ஆகியவற்றில் பிசியாக இருக்கும் கவுதம் மேனன், அடுத்து பாலா இயக்கி கைவிடப்பட்ட ‘வர்மா’ படத்தை இயக்கவிருக்கிறார் என்று செய்திகள் பரவின. இச்செய்தியை கவுதம் மறுக்கவில்லை எனினும் தயாரிப்பாளர்களிடம் ‘நோ’ சொல்லிவிட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா - ஜோதிகா நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `காக்க காக்க' படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காக்க காக்க படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, இரண்டாவது பாகம் குறித்து கவுதம் மேனனனிடம் பேசியிருப்பதாகவும், அதற்கான பணிகள் விரைவில் துவங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.இதிலும் சூர்யா - ஜோதிகாவை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாகவும் கதை சரியாக 16 வருடங்கள் கழித்து நடப்பதாகவே அமைக்கப்பட இருப்பதால் அவர்களது வயது குறித்த பிரச்சினைகள் எதுவும் வராது என்றும் தெரிகிறது. பார்ட் 2வுக்கு மீண்டும்  ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாகவும், அடுத்த வருடம் படப்பிடிப்பு துவங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.2016ம் ஆண்டில் சிம்பு நடிப்பில்  வெளிவந்த ’அச்சம் என்பது மடமையடா’ படத்துக்குப் பின் கடந்த மூன்று ஆண்டுகளாக கவுதம் வாசுதேவ மேனனுக்கு ஒரு படம் கூட ரிலீஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இவ்வளவு மக்கள் Support பண்றாங்க.. சண்முக பாண்டியன்
ஒருத்தர விடல; வீடு புகுந்து எல்லோரையும் தூக்கிய போலீஸ்: பாக்கியத்தின் ரிவெஞ்ச் ஸ்டார்ட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி புரோமோ!