ராஜாஜி அரங்கில் தொகுப்பாளர் கோபிநாத் மீது தடியடி.....!!!

Asianet News Tamil  
Published : Dec 06, 2016, 04:33 PM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
ராஜாஜி அரங்கில் தொகுப்பாளர் கோபிநாத் மீது தடியடி.....!!!

சுருக்கம்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக  நேற்று இரவு காலமானார். 

இந்நிலையில் இன்று அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. இவருக்கு பல முக்கிய தலைவர்களும், பிரபுகர்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்களில்  அவரை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று மக்கள் கூட்டம் ராஜாஜி அரங்கில் அலைமோதியது.

இந்த கூட்டத்தில் மக்களோடு மக்களாக நீயா நானா கோபியும் கலந்து கொண்டார். ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் தடியடி நடத்தினார்.

இந்த தடியடியில் எதிர்பாராதவிதமாக கோபிநாத் சிக்கிக்கொண்டார். சில அடிகளும் அவர் மீது வீசப்பட்டது. நிலைமையை அறிந்து அவர் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.

அனைவரும் அறிந்த ஒரு பிரபலத்திற்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்கள் பலர் அவரை பார்க்க அடியையும் வாங்கி கொண்டு நிற்கின்றனர்..... அம்மா அம்மா என்று அழைத்து கொண்டு.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

3 நாளில் 500 கோடி! இந்திய சினிமாவையே மிரள வைத்த 'துரந்தர் 2'! பாக்ஸ் ஆபிஸில் அடுத்தடுத்த சரித்திரம்!
முதலில் விஜய்க்குத் தான் அந்த கதை! 'கருப்பு' படத்தின் சீக்ரெட் சொன்ன ஆர்.ஜே. பாலாஜி! சூர்யா உள்ளே வந்தது எப்படி?