பட்டு வேஷ்டியில் ரோபோர்ட்.. வேற லெவலில் வெளியான பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் 'கூகுள் குட்டப்பன்' ஃபர்ஸ்ட் லுக்!

Published : Aug 03, 2021, 07:23 PM IST
பட்டு வேஷ்டியில் ரோபோர்ட்.. வேற லெவலில் வெளியான பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் 'கூகுள் குட்டப்பன்' ஃபர்ஸ்ட் லுக்!

சுருக்கம்

பிக் பாஸ் லாஸ்யா, மற்றும் தர்ஷன் நடிப்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள 'கூகுள் குட்டப்பன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

பிக் பாஸ் லாஸ்யா, மற்றும் தர்ஷன் நடிப்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள 'கூகுள் குட்டப்பன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபகாலமாக மலையாளம், தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 'ஆண்ட்ராய்டு குச்சுப்பன்' என்கிற மலையாளப் படத்தின் ரீமேக்காக தற்போது 'கூகுள் குட்டப்பன்' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி 'பிரெண்ட்ஷிப்' படத்தில் நடிகையாக அறிமுகமான, லாஸ்யா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் நற்பெயரை பெற்று, கடைசிநேரத்தில் வெளியேறிய தர்ஷன் நடித்துள்ளார்.  மேலும் கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, யோகி பாபு, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் அமெரிக்கப் படமான 'Robert and Frank' என்ற படத்தை தழுவியே ,மலையாளத்தில் 'ஆன்ராய்டு குஞ்சுப்பன்' என்ற பெயரில் எடுக்கப்பட்டது. வெளிநாட்டில் வேலை செய்கிற மகன், தன்னுடைய தந்தை தனியாக இருப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவருக்கு ஒரு ரோபோ அனுப்புகிறார். அந்த ரோபோவுடன் சுமார் நான்கு மாதங்கள் நட்பாக பழகி அதனை தன் குடும்பத்தில் ஒருவராக நினைக்க துவங்கும் தந்தையிடமிருந்து, திரும்ப அந்த ரோபோவை எடுத்துச் செல்லும் போது நடக்கும் பிரச்சினைகளை எப்படி கதாநாயகன் சமாளிக்கிறார் என விருவிருப்பான கதையோட்டத்துடன் இப்படம் அமைந்துள்ளது.

காமெடி, சென்டிமென்ட் , காதல், என அனைத்துக்கும் பஞ்சமில்லாமல் உருவாகியுள்ள இப்படம் தற்போது தமிழிலும் வெளியாகி ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார் நடித்துள்ளதுடன் இப்படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படத்தை கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த, சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார்.

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட்லுக் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், சற்று முன்னர் இந்த படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழர்களின் பண்பாட்டுடன், ரோபோட்டுக்கு வேட்டி, சட்டை, பட்டு துண்டு என அதையும் குடும்பத்தில் ஒருவராக பார்க்கும் தந்தை கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிக்குமார் நடித்துள்ளார். வெளிநாட்டு வேலை செய்யும் மகனாக தர்ஷனும், அவரது காதலியாக லாஸ்லியாவும் நடித்துள்ளார்.  

தாற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கம்பீரமாக எண்ட்ரி கொடுத்த பாஸ் கார்த்திக்- சூடுபிடிக்க தொடங்கிய கார்த்திகை தீபம்; கொண்டாடும் ஃபேன்ஸ்!
ஜன நாயகன் லேட்டஸ்ட் அப்டேட்: மீண்டும் ஒரு மெர்சல் மேஜிக்? இரண்டு கெட்டப்பில் மிரட்டப்போகும் விஜய்?