கல்லூரியில் சூர்யாவின் பட்டப்பெயர் இதுதானாம்... விஜய்க்கு கூட இந்த விஷயம் அப்பவே தெரியுமோ?

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 03, 2021, 06:55 PM IST
கல்லூரியில் சூர்யாவின் பட்டப்பெயர் இதுதானாம்... விஜய்க்கு கூட இந்த விஷயம் அப்பவே தெரியுமோ?

சுருக்கம்

குறிப்பாக சூர்யாவிற்கு அவருடைய நண்பர்கள் வைத்த பட்டப்பெயர் குறித்து அவரே பேசியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  

லயாலோ கல்லூரியில் ஏராளமான நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் படித்திருப்பது பெரும்பாலானோருக்கு தெரிந்த தகவல். குறிப்பாக நடிகர்கள் விஜய், சூர்யா உள்ளிட்டோர் லயோலா கல்லூரியில் படித்தவர்கள் தான். சமீபத்தில் லயோலா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு இணையம் வழியாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் சூர்யா தன்னுடைய பசுமையான கல்லூரி நினைவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார். 

தன்னுடைய கல்லூரி காலம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை சூர்யா பகிர்ந்து கொண்ட காணொலி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக சூர்யாவிற்கு அவருடைய நண்பர்கள் வைத்த பட்டப்பெயர் குறித்து அவரே பேசியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  

கல்லூரி காலங்களில் சூர்யாவிற்கு பெரிதாக மேடை ஏறி பேசி பழக்கம் இல்லையாம். ஆனால் முதன் முறையாக கல்லூரியில் ஒரு நிகழ்வின் போது அவரை அறிமுகப்படுத்திக் கொள்ள சொல்லியிருக்கிறார்கள். அப்போது பதற்றத்தில் சூர்யா, என் பெயர் சரவணன், நான் டூகாம் படிக்கிறேன் என கூறிவிட்டார். என்னடா இது முதல் முறையாக பேச கிடைத்த வாய்ப்பில், இரண்டு வார்த்தை கூட கோர்வையாக பேச தெரியவில்லையே என வெட்கப்பட்டராம். அன்றிலிருந்து சில நாட்கள் நண்பர்கள் அவரை ‘ஏய் டூகாம்’  என்று தான் அழைத்து வந்தார்களாம். 

அதேபோல் சூர்யாவிற்கு கல்லூரி நாட்களில் பாடத் தெரியாதாம். ஆனால் பாடலுக்கு சூப்பராக விசில் அடிப்பாராம். அவர் விசில் சத்தம் படு பயங்கரமாக கேட்குமாம். அதனால் அவருடைய நண்பர்கள் பிகில் என பட்டப்பெயர் வைத்து அழைப்பார்களாம். இந்த செய்தியைக் கேட்ட ரசிகர்களோ ஓ... அப்போ இதை தெரிஞ்சி தான் விஜய் சார் படத்துக்கு பிகில்-ன்னு பெயர் வச்சியிருப்பாங்களோ? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கம்பீரமாக எண்ட்ரி கொடுத்த பாஸ் கார்த்திக்- சூடுபிடிக்க தொடங்கிய கார்த்திகை தீபம்; கொண்டாடும் ஃபேன்ஸ்!
ஜன நாயகன் லேட்டஸ்ட் அப்டேட்: மீண்டும் ஒரு மெர்சல் மேஜிக்? இரண்டு கெட்டப்பில் மிரட்டப்போகும் விஜய்?