விஜய் செய்த சாதனைகளை சல்லி சல்லியாய் நொறுக்கிய அஜித்... கொண்டாட்டத்தில் தல ஃபேன்ஸ்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 03, 2021, 05:17 PM IST
விஜய் செய்த சாதனைகளை சல்லி சல்லியாய் நொறுக்கிய அஜித்... கொண்டாட்டத்தில் தல ஃபேன்ஸ்...!

சுருக்கம்

பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே 4 லட்சம் பேரைக் கடந்த நிலையில், தற்போது 18 மணி நேர நிலவரப்படி விஜய் பாடல்கள் செய்த சாதனைகள் பலவற்றையும் தவிடு பொடியாக்கி வருகிறது. 

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து போனிகபூர் - ஹெச்.வினோத் - அஜித் ஒன்றிணைந்துள்ள வலிமை திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். கொரோனா காரணமாக படம் குறித்த அப்டேட் அனைத்துமே தள்ளிப்போக, ரசிகர்களின் தொடர் போராட்டத்திற்கு வெற்றியாக கடந்த 11ம் தேதி மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இதனை சோசியல் மீடியாவில் தல ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். 

அதனைத் தொடர்ந்து டிரெய்லருக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்தாக நேற்று ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டது. முதலில் இரவு 7 மணி எனக்கூறப்பட்ட நிலையில், பின்னர் அது இரவு 10.45 மணியாக மாற்றப்பட்டது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் ‘நாங்க வேற மாரி’ எனத் தொடங்கும் பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இரவு நேரமாகவே இருந்தாலும் தல ரசிகர்கள் அதனை கொண்டாடி தீர்த்துவிட்டனர். பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே 4 லட்சம் பேரைக் கடந்த நிலையில், தற்போது 18 மணி நேர நிலவரப்படி விஜய் பாடல்கள் செய்த சாதனைகள் பலவற்றையும் தவிடு பொடியாக்கி வருகிறது. 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘பிகில்’ படத்தில் இடம் பெற்ற வெறித்தனம் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே உலகளவில் கடைசி 24 மணி நேரத்தில் அதிகம் பேர் பார்த்த பாடல்கள் பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்தது.யூ-டியூப்பில்  இந்த பாடலை 42 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து, சுமார் 7 லட்சம் பேர் லைக் செய்திருந்தனர். அதன் பின்னர் கடந்த ஆண்டு லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான ‘குட்டி ஸ்டோரி’ பாடல் , 24 மணி நேரத்தில் 9 மில்லியன் பார்வைகள் மற்றும் 1 மில்லியன் லைக்ஸ்களை பெற்று சாதனை படைத்தது.

தற்போது அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிய வலிமை பட ஃபர்ஸ்ட் சிங்கிள் 18 மணி நேரத்திலேயே  6.8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 933 K லைக்ஸ் உடன் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. மேலும் அஜித் திரையுலகில் அடியெடுத்து வைத்து 29 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு,  ட்விட்டரில் வேறு வலிமை கொண்டாட்டத்தை ரசிகர்கள் தூள் கிளப்பி வருகின்றனர். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிங்கத்த பார்த்து ஷாக் ரியாக்‌ஷன் கொடுத்த சந்திரகலா அண்ட் சாமுண்டீஸ்வரி: கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!
கம்பீரமாக எண்ட்ரி கொடுத்த பாஸ் கார்த்திக்- சூடுபிடிக்க தொடங்கிய கார்த்திகை தீபம்; கொண்டாடும் ஃபேன்ஸ்!