
நடிகை யாஷிகா விபத்துக்கு பின்னர் அறுவை சிகிச்சைகள் முடிந்து, நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், தாற்போது இந்த விபத்து குறித்தும், தன்னுடைய உடல் நிலை குறித்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்வு பூர்வமாக பகிர்ந்துள்ளார்.
ஏற்கனவே தன்னுடைய தோழி வள்ளி செட்டி பவானி மறைவு குறித்து, நேற்று இரவு மிகவும் எமோஷனல் பதிவு ஒன்றை யாஷிகா போட்டிருந்த நிலையில், அதை தொடர்ந்து இந்த விபத்து குறித்து... பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், அவரது உடல் நிலை குறித்தும் கேட்டிருந்த ரசிகர்களுக்கும் தன்னுடைய பதிவின் மூலம் பதிலளித்துள்ளார்.
திரைப்படங்களில் பார்க்கவே செய்து வைத்த சிலை போல் இருக்கும் யாஷிகாவுக்கா...? இப்படி ஒரு நிலை என நெஞ்சை பதற வைத்துள்ளது இவர் கொடுத்துள்ள ஹெல்த் அப்டேட். இந்த பதிவில் எடுத்ததுமே... "எல்லா எதிர்மறை எண்ணங்களையும் தவிர்த்து, அனைவரது பிரார்த்தனைகளுக்கும், நலன் விரும்பிகளுக்கும், அனைவரது அக்கறை மற்றும் அன்புக்கும் நன்றி என கூறியுள்ளார்".
இதை தொடர்ந்து தன்னுடைய உடல் நிலை குறித்து அவர் கூறியுள்ளதாவது... " தனக்கு இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவுகள் மற்றும் வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுத்து வருவதாகவும், எழுந்து நிற்கவோ... நடக்கவோ குறைத்து 5 மாதங்கள் ஆகும். தாற்போது நாள் முழுவதும் பெட் ரிட்டர்னாக உள்ளேன். இயற்கை உபாதைகளை கூட பெட்டில் தான் கழிக்கிறேன் என கூறியுள்ளார் யாஷிகா.
தன்னால், இடது அல்லது வலது பக்கம் திரும்ப முடியாது. பல நாட்கள் இப்படியே தான் இருக்க வேண்டும். என்னுடைய பின் பகுதி முழுவதும் காயமடைந்துள்ளது. எனினும் அதிர்ஷ்டவசமாக என் முகத்தில் எதுவும் காயம் ஏற்படவில்லை. இது நிச்சயமாக எனக்கு மறு பிறப்பு என்றே உணர்கிறேன். அதே நேரத்தில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடவுள் என்னை தண்டித்துள்ளார். ஆனால் நான் இழந்ததை ஒப்பிடும்போது இது ஒன்றுமில்லை... உணர்வு பூர்வமாக தெரிவித்துள்ளார் யாஷிகா.
இவரது இந்த பதிவை பார்த்து நெட்டிசன்கள் மற்றும் அவரது ரசிகர்கள் தங்களுடைய ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள். விரைவில் யாஷிகா குணமடையவும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.