
இயக்குனர் மிஷ்கின், பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்கு பின், பிசாசு 2 படத்தை இயக்கம் முயற்சியில் இறங்கினார். இந்த படத்தை. ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் தெலுங்கு மற்றும் தென்னிந்திய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'பிசாசு 2 ' படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகை பூர்ணா, சந்தோஷ் பிரதாப், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று தேசிய விருது இயக்குனர், வெற்றிமாறன் பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவார் என, படக்குழு தெரிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ஹாரர் படமான இந்த படத்தில் ஏற்கனவே, ஆண்ட்ரியா ஒரு காட்சியில் ஆடை இல்லாமல் நடித்துள்ளார் என கூறப்பட்ட நிலையில், அதற்க்கு ஏற்ற போல் இந்த போஸ்டரும் வெளியாகியுள்ளது.
பெண் ஒருவர், துளியும் உடலில் ஆடை இன்றி... பாத் டப்பில் படுத்திருப்பது போலவும், அவரது கால்கள் மட்டுமே வெளியே தெரிகிறது. கையில் சிகரெட் வைத்துள்ளார். திகிலுக்கு பஞ்சம் இல்லாமல் வெளியாகியுள்ளது ஃபர்ஸ்ட் லுக். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார், சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விரைவில் இப்படத்தின் First Single வெளியீடு தேதி அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.