கோட் படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ள நடிகர் விஜய்யின் கார் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறது.
நடிகர் விஜய் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை கேரளாவில் நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, அதற்காக கேரளா சென்றுள்ளது. அதன்படி நடிகர் விஜய்யும் கோட் பட ஷூட்டிங்கில் கலந்துகொள்வதற்காக நேற்று கேரளா சென்றார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றடைந்தார் விஜய்.
நேற்று மாலை கேரளா வந்தடைந்த நடிகர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்காக காலையில் இருந்தே திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விஜய் ரசிகர்கள் குவியத் தொடங்கினர். கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பின்னர் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய், கேரளா வந்துள்ளதால் அவரை காண அதிகளவிலான ரசிகர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். மாலை நான்கு மணியளவில் கேரளா வந்த விஜய்க்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... விமான நிலையத்தில் விஜயை பார்த்து ஆர்ப்பரித்த கேரள ரசிகர்கள்! கை கூப்பி வணங்கி அன்பை வெளிப்படுத்திய தளபதி!
இதையடுத்து அங்கு குவிந்திருந்த ரசிகர்களை பார்த்து காரில் இருந்தபடியே கையசைத்து, அவர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய், அங்கிருந்து ஓட்டலுக்கு செல்லும் வழிநெடுகிலும் ரசிகர்கள் அலைகடலென திரண்டிருந்தனர். இதனால் திடீர் ரோட் ஷோவாக மாறியது விஜய்யின் கேரளா விசிட். ரசிகர்கள் விஜய்யின் காரை சூழ்ந்து கொண்டதால், அந்த கூட்டத்தின் நடுவே மெதுவாக ஊர்ந்து சென்றது தளபதியின் கார். இதனால் திருவனந்தபுரமே ஸ்தம்பித்து போனது.
விஜய்யின் கேரளா வருகை குறித்த வீடியோக்கள் தான் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடிகர் விஜய் சென்ற கார், கூட்டத்தில் சிக்கி சல்லி சல்லியாய் நொறுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அந்த காரின் கதவுகள் கூட்ட நெரிசலில் சிக்கி நசுங்கிப்போய் உள்ளன. அதேபோல் கார் கண்ணாடியும் சுக்குநூறாய் உடைக்கட்டு இருக்கிறது. விரைவில் நடிகர் விஜய் தன்னுடைய கேரள ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Car Totally Damaged😂🔥 pic.twitter.com/VFa9PQrcfG
— Mᴜʜɪʟツ𝕏 (@MuhilThalaiva)இதையும் படியுங்கள்... தளபதி வருகையால் ஸ்தம்பித்து போன கேரளா..! ஏர்போட்டில் வீறுநடை போட்டு வந்த விஜய்யின் வீடியோ வைரல்!