தளபதி வருகையால் ஸ்தம்பித்து போன கேரளா..! ஏர்போட்டில் வீறுநடை போட்டு வந்த விஜய்யின் வீடியோ வைரல்!

By manimegalai a  |  First Published Mar 18, 2024, 5:32 PM IST

கேரளாவில், 'கோட்' படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதை ஒட்டி... தளபதி விஜய் சற்றுமுன் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்திறங்கினார். அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
 


கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு ஒருவாரம் வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தளபதி விஜய் இன்று திருவனந்தபுரம் வந்தார். அவரை வரவேற்கவும் பார்க்கவும் ஏராளமான ரசிகர்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் குவிந்த நிலையில்... தளபதி விமான நிலையத்தில் நடந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் லியோ, படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கோட்'  படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. எனவே இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்புக்காகவே தளபதி திருவனந்தபுரம் வந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

மஹாவுக்கு தெரியவந்த உண்மை! வீட்டை விட்டு வெளியேறிய தருணம்... காதலை உணர்வாரா சூர்யா! ஆஹா கல்யாணம் அப்டேட்!

'கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை, திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் சற்று முன் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய தளபதிக்கு விமான நிலைய ஊழியர்கள் முதல், ரசிகர்கள் வரை உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் வீறு நடை போட்டு... விமான நிலையத்திற்குள் சென்ற நிலையில், அவருக்கு பலத்த பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

click me!