
சமீபத்தில் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, பிரம்மாண்ட வெற்றியடைந்தத நிலையில்... இதனைத்தொடர்ந்து, இயக்குநர் ராஜேஷ்.M இயக்கத்தில் வெளியான, மற்றொரு வெற்றிப்படமான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படமும், ரீ ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் ராஜேஷ்.M இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில், கலக்கலான ரொமான்ஸ் காமெடி ஜானரில் வெளியான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ வெளியானபோதே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
யுவன் சங்கர் ராஜா இசையில் சூப்பர் ஹிட் பாடல்களுடன் வெளிவந்த இப்படத்தின் மொத்தப்பாடல்களும் இன்றளவும் ரசிப்பட்டு வருகிறது. மேலும் நடிகர் ஆர்யா திரைவாழ்க்கையில் மிக முக்கியமான வெற்றித்திரைப்படமாக அமைந்தது.
மேலும் சமீப காலமாக... ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படங்கள்... மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது நயன் - ஆர்யா நடிப்பில் வெளியான 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தை ரீ-ரிலீஸ் செய்து குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி,மார்ச் 22-ஆம் தேதி பல திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
காமெடி கலந்த ரொமான்டிக் படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குநர் ராஜேஷ்.M, தற்போது நடிகர் ஜெயம்ரவி நடிப்பில், SCREEN SCENE MEDIA தயாரிப்பில், ‘பிரதர்’ படத்தை இயக்கி உள்ளார் . இப்படம் இறுதிகட்ட பணிகளில் உள்ளது. மேலும் SRI VARI FILMS ரங்கநாதன் தயாரிப்பில், அதர்வா மற்றும் அதிதிசங்கர் நடிக்கும், புதிய படம் ஒன்றையும் இயக்க உள்ளர். அதற்கான ஆரம்பகட்ட முன் தயாரிப்பு பணிகளையும் தற்போது செய்துவருகிறார். இந்த சூழலில் தற்போது ரீ ரிலீஸாகப்போகும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ படத்தின் முதல் காட்சியை ரசிகர்களோடு, ஆவலோடு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.