
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு, அர்ஜுன் - மதுபாலா நடிப்பில் வெளியாகி சூப்பர் - டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் 'ஜென்டில்மேன்'. இந்த படத்தை தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் தயாரித்திருந்தார். இப்படம் வெளியாகி சுமார் 30 வருடங்கள் கழித்து தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் 'ஜென்டில்மேன் ' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது குறித்து அதிகார பூர்வமாக அறிவித்தார். முதல் பாகத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கிய நிலையில், இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஏ.கோகுல் கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளார்.
ஜென்டில்மேன் 2 படத்தின், படப்பிடிப்பு பணிகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் இசை கோர்ப்பு பணிகளையும் சமீபத்தில் இசையமைப்பாளர் கீரவாணி மேற்கொண்டது பற்றிய தகவல்கள் வெளியானது. RRR படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி இந்த படத்திற்கு இசையமைப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
முதல் பாகத்தில் ஹீரோவாக அர்ஜுன் நடித்திருந்த நிலையில், இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சேத்தன் சீனு நடிக்கிறார். ஹீரோயினாக நயன்தாரா சக்கரவர்த்தி நடிக்க உள்ளார். முதல் பாகம் விட இரண்டாம் பாகத்தை தயாரிப்பாளர் குஞ்சுமோன் பிரமாண்ட பொருட்செலவில் எடுத்து வருகிறார். இப்படம் குறித்து அடுத்தடுத்து பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.