மாவீரன் படம் பார்த்த ரஜினிகாந்த் தன்னை போனில் அழைத்து பாராட்டியதாக நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த திரைப்படம் மாவீரன். மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருந்தார். மேலும் வில்லனாக மிஷ்கினும் முக்கிய கதாபாத்திரத்தில் சரிதா, யோகிபாபு, குக் வித் கோமாளி மோனிஷா, சுனில் ஆகியோர் நடித்திருந்த இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்து இருந்தார்.
பேண்டஸி கதையம்சம் கொண்ட மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கார்டூனிஸ்ட் ஆக நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்தது. இப்படம் உலகளவில் ரூ.75 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. மாவீரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி அப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... இமயமலை கிளம்பினார் ரஜினிகாந்த்! ஜெயிலர் ரிவ்யூ.. சூப்பர்ஸ்டார் சர்ச்சை குறித்து சூப்பர்ஸ்டார் அளித்த பதில் இதோ
இந்நிலையில், மாவீரன் படம் பார்த்து ரியல் மாவீரன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மாவீரன் பார்த்த உடன் போன் செய்த ரஜினிகாந்த், கலக்கீட்டிங்க சிவா... எப்படி இந்த மாதிரி வித்தியாச வித்தியாசமா கதையை சூஸ் பண்றீங்க என கேட்டாராம். ரஜினியின் இந்த வாழ்த்தால் மகிழ்ச்சியில் திளைத்து போன சிவகார்த்திகேயன் தலைவா யூ ஆர் கிரேட் என மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
❤️❤️❤️🙏🙏🙏 sir pic.twitter.com/0EMO7yUSI2
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan)அதோடு ரஜினியின் ஜெயிலர் படம் ரிலீஸ் ஆக உள்ளதற்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள சிவா, அப்படத்திற்காக தானும் மிகவும் ஆவலோடு காத்திருப்பதாக கூறி இருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு முன்னதாகவே மாவீரன் என்கிற டைட்டில் உடன் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1986-ம் ஆண்டு ஒரு தமிழ் படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பீஸ்ட்டில் சொதப்பினாலும்... ஜெயிலர் படத்திற்காக நெல்சனுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் - அதுவும் இத்தனை கோடியா?