நீதிபதி முன் நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டம்..!

 
Published : Dec 09, 2017, 02:41 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
நீதிபதி முன் நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டம்..!

சுருக்கம்

General Meeting to be held before Judge

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு  கடந்த ஏப்ரல் 2ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் நடிகர் விஷால் அணி வெற்றி பெற்றது. தற்போது இந்த தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக தயாரிப்பாளர் பொதுக்குழுக் கூட்டம் வரும்  ஞாயிறு அன்று காலை 10:30 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. 

மேற்படி பொதுக்குழுக் கூட்ட சங்க விதியின்படி 21 தினங்களுக்கு முன்பாகவே நிரந்தர உறுப்பினர்களுக்கு,  தபால் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்றும். அத்துடன் சங்க விதியில் சில மாற்றங்கள் செய்து பழைய மற்றும் மாற்றப்பட்ட புதிய விதிகள் மாற்றங்களையும் கருத்தில் கொண்டு  1211 உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் தெரியப்படுத்தி உள்ளனர் நிர்வாகிகள்.

மேலும்  கடந்த 7 ஆம் தேதி அன்று  சங்க உறுப்பினர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறக் கூடாது என கூறி தடை உத்தரவு கோரியுள்ளார்கள். ஆனால்  நீதிபதி  கார்த்திகேயன் மனுவை நிராகரித்து விட்டார். அத்துடன் மேற்படி பொதுக்குழுவில் கூட்ட நடவடிக்கையை பார்வையிட கண்காணிப்பாளர் ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ராமநாதனை  நியமித்துள்ளார்கள். 

நாங்கள்தான் பொதுக்குழு நடத்த  ஏற்பாடுகள்  செய்துவிட்டதால். ஏற்கனவே நீதிபதி கார்த்திகேயன்  கூறிய  ஆணையை ஏற்று நீதிபதி ராமநாதன்  பார்வையில் பொதுக்குழு நடைபெற உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எங்களுக்கு பொதுக்குழுவை நடத்துவதில் எந்தக் கருத்து வேறுபாடும்  இல்லை என்பதையும் இதன் வாயிலாக தெரிவித்து கொள்கிறோம். என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க​ம்​ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்க அறிக்கை 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்