
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் நான் தமிழ் பொண்ணு என்று கூறி, ஒரு சிறு சர்ச்சையில் சிக்கினார் மதுமிதா. இதற்கு எதிர்பார்த்ததை விட கொஞ்சம் ஓவராகவே ரியாக்ட் செய்தார் அபிராமி.
இந்த விஷயம் ஒரு உப்பு சப்பு இல்லாத விஷயமாகவே, மக்களால் பார்க்கப்பட்டாலும், இதற்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதமும், மதுவை ரௌண்டு கட்டி அட்வைஸ் கொடுத்தது பார்ப்பவர்களுக்கு அவர் மேல் பாவம் என நினைக்க வைத்த விட்டது.
மதுமிதா பக்கம் ஒருவர் கூட பேசாததால், மிகவும் மன உளைச்சலில் காணப்படுகிறார். மேலும் தன்னுடைய பெட்டில் அமர்ந்த படி தனக்கு தானே பேசி கொண்டு ஆறுதலும் கூறி கொள்கிறார். மேலும் மக்கள் இதனால் தன்னை தவறாக நினைத்து விடுவார்களோ என்கிற பயமும் இவருக்கு இருப்பது அனைவராலும் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரமோவில் 'கரெக்டாக இருந்தாலே இந்த ஊர்ல பிரச்சனைதான், உலகத்திலேயே நியாயமானவன் நான் தான் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்று கவின் கூறுகிறார்.
இன்னொருபுறம் மதுமிதா, 'என்னோட பார்வை தவறாக இருக்குது மீதி எல்லாரும் கரெக்டாக இருக்காங்க, எல்லாரும் கேமை நல்லா விளையாடுறாங்க நான் தான் இன்னும் கேமுக்குள்ளேயே வராம வெளிய நின்னு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றேன்' என்று தனியே புலம்புகிறார். இதில் இருந்து எந்த அளவுக்கு அவர் மனம் பாதிக்கப்பட்டு இருக்கிறது என மக்கள் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.