
ஆட்டம் போட்ட லாஸ்லியா..! அசந்து பார்த்த கமல்..!
நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது லாஸ்லியா தொகுத்து வழங்கிய விதம் அனைவரையும் கவர்ந்து உள்ளதாக சில பதிவுகளை பார்க்க முடிகிறது.
அகம் டிவி வழியாக, போட்டியாளர்களிடம் நேரடியாக பேசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், லாஸ்லியா போட்ட ஆட்டத்தை பார்த்து அசந்து போனார். ஸ்டெப்ஸ் சொல்லி கொடுத்தது யார் என கேள்வியும் கேட்டு இருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு வார காலமாக நடந்த விஷயங்களை பாத்திமாபாபு தொகுத்து வழங்கினார். அவருக்கு அடுத்தபடியாக லாஸ்லியாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. லாஸ்லியாவும் செய்தி வாசிப்பாளர் என்பதால் செய்தியாக வாசிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தருணத்தில், ஏதோ ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது போல் எடுத்துரைத்தார். அப்போது ஒவ்வொருவரை பற்றி சொல்லும் போது அவருக்கே உண்டான உடல் அசைவுகளை நடனம் போல ஆடி வெளிப்படுத்தினார்.
இதற்கெல்லாம் யார் ஸ்டெப் கற்றுக் கொடுத்தார்கள் என அவர் கேட்க வேறு யாரு சாண்டி தான் இருக்க முடியும் என கமல் சொல்ல நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் அனைவரும் சிரித்தபடி ஜாலியாக இருந்தனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.