
நவரச நாயகன் கார்த்தியின் மகனான கௌதம் கார்த்திக் கடல் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் ராதாவின் மகள் துளசி நாயரும் அறிமுகமாகியிருந்தார். மீனவர்கள் சார்ந்த கதைக்களத்தில் உருவான இந்த படம் சிறந்த நடிகருக்கான விருதை கௌதம் கார்த்திக்கு பெற்றுக் கொடுத்தது. ஆனால் இதைத் தொடர்ந்து வெளியான எந்த படமும் இவருக்கு பெரிய வெற்றிகள் பெற்றுக் கொடுக்கவில்லை மூன்றாவது தலைமுறை நடிகரான கௌதம் கார்த்திக் 'என்னமோ ஏதோ', வை ராஜா வை, முத்துராமலிங்கம், ரங்கோன், இவன் தந்திரன், இந்திரஜித் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். ஆனால் எந்த படமும் முதல் படம் அளவிற்கு ரசிகர்களை ஈர்க்கவில்லை என்று கூறலாம். இவரும் முன்னணிக்கு நடிகராக பல பரிட்சை செய்து வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு...லோ நெக் பனியன்..கிழிந்த ஜீன்ஸ்..கவர்ச்சி கிளப்பிய அக்ஷரா ஹாசன்
முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான தேவராட்டம் ஓரளவுக்கு ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தில் மஞ்சிமா மோகன் நாயகியாக நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நிச்சயிக்கப்படும் என்கின்ற பேச்சும் கோலிவுட் வட்டாரத்தில் அடிபட்டு வருகிறது. இறுதியாக கௌதம் கார்த்திக் நடிப்பில் ஆனந்தம் விளையாடும் வீடு, யுத்த சத்தம் உள்ளிட்ட படங்கள் வெளியாகியிருந்தன. இதில் யுத்த சத்தம் படத்தை எழில் இயக்கி இருந்தார். பார்த்திபன் உடன் நடித்திருந்தார். இந்த படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
மேலும் செய்திகளுக்கு...வெளிநாட்டில் தேசிய கொடியை பறக்கவிட்ட நயன்- விக்கி...வீடியோ உள்ளே!
தற்போது பத்து தல படத்தில் சிம்புவுடன் நடிக்கிறார் கௌதம் கார்த்திக். அதோடு 1947 என்னும் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் தான் தற்போது வெளியாகி உள்ளது. என் எஸ் பொன்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகை ரேவதி அறிமுகமாகியுள்ளார்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்த படம் இந்திய சுதந்திரம் அடைந்த மறுநாள் நிகழ்ந்த சம்பவத்தை தழுவி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே மாதம் வெளியானது. தற்போது சுதந்திர தின விழாவின் சிறப்பாக இந்த படத்தில் இருந்து டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...வெளிநாட்டு தெருக்களில் நயன்..கிளாமர் உடையில் ட்ரம்ஸ் கலைஞரை ரசிக்கும் விக்கியின் மனைவி
இதன் ஃபர்ஸ்ட் லுக்கில் கௌதம் கார்த்திக் ஒரு கலவரத்தை முன்னெடுத்துச் செல்லும்போது பின்னணிகள் ஒரு காடு பற்றி எரிவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. தற்போது டீசரை பகிர்ந்துள்ள சிம்பு தனது பதிவில் சுதந்திரத்திற்காக போராட்டம், ஒடுக்கு முறைக்கு எதிரான சக்தி, சுதந்திர தின சிறப்பு என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் சில இடங்களில் படமாக்கப்பட்டுள்ள படம் தற்போது போஸ்ட் ப்ரடெக்ஷன் வேலைகளில் உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.