
முதல்முறையாக எழில் - ஜிவி பிரகாஷ் கூட்டணி சேர்ந்திருக்கும் 'ஆயிரம் ஜென்மங்கள்' ஹாரர் ஃபேண்டஸி படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஈஷா ரெப்பா, நிகிஷா பட்டேல் என டபுள் ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
இதில், முக்கிய கேரக்டரில் சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்துக்கு, சி.சத்யா இசையமைத்துள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'ஆயிரம் ஜென்மங்கள்' படம், வரும் டிசம்பர் 20ம் தேதி ரிலீசாகும் என சில தினங்களுக்கும் முன்பு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, படத்தை விளம்பரப்படும் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. ஏற்கெனவே, இந்தப் படத்தின் இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இசை வெளியீடு குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு உற்சாகத்தை தரும் வகையில், 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்தின் இசை நாளை (நவ. 27) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், நாளை (நவ. 27) நண்பகல் 12 மணிக்கு "அருப்புக் கோட்டையிலே" என்ற வீடியோ பாடலும் வெளியிடப்படும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.
ஆயிரம் ஜென்மங்கள்' படத்துக்காக ஜிவி பிரகாஷ் அளிக்கும் இந்த டபுள் ட்ரீட், ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.