ஆஸ்கர் விருது பெற்ற 'நாட்டு நாட்டு' & ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ - வாழ்த்துக்கள் சொன்ன பிரபலங்கள் யார் யார்.?

By Raghupati R  |  First Published Mar 13, 2023, 11:18 AM IST

ஆஸ்கர் விருது வென்ற தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் மற்றும் ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


உலக ரசிகர்கள் எதிர்பார்த்த 95வது ஆஸ்கர் விருதுகள் இன்று அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்கியது. இந்த விருது விழாவில் உலகம் முழுவதும் பரிந்துரைக்கப்பட்ட படைப்புகள் போட்டியிட்டன. அதில் இந்தியாவின் சார்பில் ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து நாட்டு நாட்டு பாடல், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ், ஆல் தட் ப்ரீத்ட் ஆகியவை போட்டியிட்டன. 

முதலில் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப் படத்திற்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து போட்டியிட்ட ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் பங்கேற்ற நிலையில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

Tap to resize

Latest Videos

இதனால் உலகம் முழுவதும் ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.இந்நிலையில் ஆஸ்கர் விருதை வென்றுள்ள ஆர்ஆர்ஆர் படக்குழுவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டு நாட்டு புகழ் உலகளாவியது. இன்னும் பல வருடங்கள் நினைவில் நிற்கும் பாடலாக இது இருக்கும். வாழ்த்துக்கள். இந்த விருதால் இந்தியா பெருமிதம் கொள்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Exceptional!

The popularity of ‘Naatu Naatu’ is global. It will be a song that will be remembered for years to come. Congratulations to , and the entire team for this prestigious honour.

India is elated and proud. https://t.co/cANG5wHROt

— Narendra Modi (@narendramodi)

Congratulations to , and the entire team of ‘The Elephant Whisperers’ for this honour. Their work wonderfully highlights the importance of sustainable development and living in harmony with nature. https://t.co/S3J9TbJ0OP

— Narendra Modi (@narendramodi)

அதேபோல ஆஸ்கர் விருது வென்ற படக்குழுவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “முதுமலை தம்பதியினர் பற்றிய ஆவணக் குறும்படம் ஆஸ்கர் விருது பெற்ற கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்காவுக்கு வாழ்த்துகள்..  இரண்டு பெண்கள் இணைந்து இந்தியாவிற்கு ஆஸ்கர் விருது பெற்று தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. முதன் முதலில் இரண்டு பெண்கள் இந்தியாவிற்கு ஆஸ்கர் விருது பெற்ற தந்ததை விட சிறந்த செய்தி எதுவும் இல்லை. ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் என்ற வரலாற்றை படைத்துள்ளது ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Congrats to Kartiki Gonsalves & on winning the .

No better news to wake up to than two women bringing the first ever Oscar for an Indian Production.

The patient making & the moving story of deserve all the praises & accolades it's getting. https://t.co/73WyGgqy3T

— M.K.Stalin (@mkstalin)

has created history by becoming the first Indian & Asian song to win the .

Congrats garu, Chandrabose, Rahul Sipligunj & Kaala Bhairava, , , and the whole team of for this stupendous achievement. https://t.co/sdSHatlEtx

— M.K.Stalin (@mkstalin)

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி, ராஜமௌலி மற்றும் கார்த்திகி கோன்சால்வ்ஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். பெருமை மிக்க இந்தியர்களுக்கு தலை வணங்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

My hearty congratulations to Shri. Keeravani, Shri. Rajamouli and Shri. Kartiki Gonsalves for getting the prestigious Oscar Award. I salute to the proud Indians.

— Rajinikanth (@rajinikanth)

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், “ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின்  நாட்டு நாட்டு பாடலுக்காக சிறந்த மூலப்பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்ற இசையமைப்பாளர் கொடுரி மரகதமணி கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.  அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதுமலையில் ஆதரவற்ற யானைக்குட்டிகளை பராமரித்து வரும் பொம்மன்-பெள்ளி இணையர் குறித்த தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்  என்ற ஆவண குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.  அப்படத்தின் இயக்குனர் கார்த்திகி, தயாரிப்பாளர் குனீத் மோங்க ஆகியோருக்கு வாழ்த்துகள்.

ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக சிறந்த மூலப்பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்ற இசையமைப்பாளர் கொடுரி மரகதமணி கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!(1/3)

— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss)

ஆதரவற்ற யானைக்குட்டிகளை பராமரிப்பதில் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ள  பொம்மன் - பெள்ளி இணையரின் தியாகம் போற்றத்தக்கது.  இப்போதும் கூட தருமபுரியில் அண்மையில் இறந்த 3 யானைகளின் குட்டிகளை தேடும் பணியில் பொம்மன் ஈடுபட்டுள்ளார். அவர்களுக்கு பாராட்டுகள்" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க..தமிழகத்தில் பாஜகவினர் உயிருடன் இருக்க முடியாது.. ஆளும் கட்சி ஆணவமா.? முற்றும் திமுக Vs பாஜக மோதல் விவகாரம்

இதையும் படிங்க..அண்ணாமலை செய்த ஊழல்கள் பட்டியல் ரெடி.. எப்போ ரிலீஸ் தெரியுமா.? திமுக கொடுத்த ஷாக்

click me!