ஃபோர்ப்ஸ் பட்டியலில்..... ரஜினியை பின்னுக்கு தள்ளிய ஏ.ஆர்.ரகுமான்.....!!! 

 
Published : Dec 24, 2016, 03:01 PM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
ஃபோர்ப்ஸ் பட்டியலில்..... ரஜினியை பின்னுக்கு தள்ளிய ஏ.ஆர்.ரகுமான்.....!!! 

சுருக்கம்

2016ஆம் ஆண்டு இன்னும் ஒருசில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் உலகின் முன்னணி ஊடகமான ஃபோர்ப்ஸ் 'Forbes' இந்தியாவின் 100 முன்னணி நட்சத்திரங்களை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் தென்னிந்தியாவை சேர்ந்த பல நடிகர், நடிகைகள் இடம்பெற்றுள்ளனர்.

முதல் பத்து இடங்களில் எந்த தென்னிந்தியாவை சேர்ந்த நடிகர் மற்றும் நடிகைகள் இடம்பெறவில்லை,  என்றாலும் 13வது இடத்தில் இசை புயல்  ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளார்.

 30வது இடத்தில் கோலிவுட்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம் பிடித்துள்ளார், 33வது இடத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவும், 46வது இடத்தில் ஸ்ருதிஹாசனும் உள்ளனர்.

அதே போல்  47வது இடத்தில் தனுஷும், 49வது இடத்தில் உலக நாயகன் கமல்ஹாசனும் உள்ளனர். 

ரஜினியைவிட ஏ.ஆர்.ரஹ்மானும் , கமல்ஹாசனை விட அவரது மகள் ஸ்ருதிஹாசனும் முன்னணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பட்டியலின் முதல் பத்து இடங்களை பெற்ற நட்சத்திரங்களின் பெயர்களை தற்போது பார்ப்போம்

1. சல்மான்கான்

2. ஷாருக்கான்

3. விராத் கோஹ்லி

4. அக்சயகுமார்

5. மகேந்திரசிங் தோனி

6. தீபிகா படுகோனே

7. சச்சின் தெண்டுல்கர்

8. பிரியங்கா சோப்ரா

9. அமிதாப்பச்சன்

10. ஹிருத்திக் ரோஷன்

மேலும் இந்த பட்டியலில் 51வது இடத்தில் சூர்யாவும், 53வது இடத்தில் காஜல் அகர்வாலும், 61வது இடத்தில் இளையதளபதி விஜய்யும், 72வது இடத்தில் சீயான் விக்ரமும், 90வது இடத்தில் பிரபுதேவாவும் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!
வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!