கமல்ஹாசனை மிரட்டும் ஆஷா சரத் கணவர்....!!! 

 
Published : Dec 24, 2016, 02:38 PM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
கமல்ஹாசனை மிரட்டும் ஆஷா சரத் கணவர்....!!! 

சுருக்கம்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

வரும் ஜனவரியில் அமெரிக்காவில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், கமலஹாசனுக்கு மகளாக நடிப்பது மேலும் சிறப்பு.

இந்நிலையில் இந்த படத்தில் மேலும் ஒரு முன்னணி மலையாள நடிகர் இணைந்துள்ளார். மோகன்லாலின் 'த்ரிஷ்யம்' படத்தில் ஆஷா சரத்தின் கணவராக நடித்த சித்திக் என்பவர் தற்போது 'சபாஷ்நாயுடு' படத்தில் இணைந்துள்ளார்.

இந்த படத்தில் 'ரா' அதிகாரியாக கமல்ஹாசன் நடித்து வருவதாகவும், அவரை மிரட்டும்  சீனியர் அதிகாரியாக சித்திக் நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

சித்திக் ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கெளதம் கார்த்திக் நடித்து வரும் 'ரங்கூன்' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!
வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!