முதல் முறையாக தல அஜித் படத்திற்க்கு நாயகியை சிபாரிசு செய்த ஷாலினி!

Published : Dec 20, 2018, 05:48 PM ISTUpdated : Dec 20, 2018, 05:49 PM IST
முதல் முறையாக தல அஜித் படத்திற்க்கு நாயகியை சிபாரிசு செய்த ஷாலினி!

சுருக்கம்

தல அஜித் படத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகள் நடிக்க காத்து கொண்டிருக்கும் நிலையில், முதல் முறையாக அஜித்தின் மனைவி ஷாலினி நடிகை ஒருவருக்கு சிபாரிசு செய்து வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார்.

தல அஜித் படத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகள் நடிக்க காத்து கொண்டிருக்கும் நிலையில், முதல் முறையாக அஜித்தின் மனைவி ஷாலினி நடிகை ஒருவருக்கு சிபாரிசு செய்து வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார். 

'வாயை மூடி பேசவும்',  'ஓகே கண்மணி', 'மகாநதி' ஆகிய படங்களில் நடித்த துல்கர் சல்மான், அடுத்ததாக நடித்து வரும் 'வான்' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிப்பவர் இயக்குனர் பிரியதர்ஷனின் மற்றும் நடிகை லிஸியின் மகளுமான கல்யாணி. தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் அதேபோல்   மலையாளத்தில் இவரை நடிக்க வைக்கவும் சில இயக்குனர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் தல அஜித் அடுத்ததாக நடிக்கவுள்ள 'பிங்க்' படத்தின் ரீமேக்கில், முக்கிய கதாப்பாத்திரமான, பாலியல் தொல்லைக்கு உள்ளான மூன்று பெண்களில் ஒருவராக இவர் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த படத்தில் இவர் நடிக்க முக்கிய காரணம் அஜித்தின் மனைவி ஷாலினிதானாம். இவர்தான் முதல்முறையாக தல அஜித் நடிக்கும் படத்திற்கு கல்யாணியை சிபாரிசு செய்துள்ளாராம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இனிமேல் நான் தான் இந்த வீட்டு மருமகள்! கோர்ட் ஆர்டருடன் வந்த ஆனந்தி - அதிர்ச்சியில் லலிதா!
Thaai Kizhavi Movie Review | தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் இதோ !