
‘உங்களுக்கு பழைய மார்க்கெட் இங்க இல்ல சார். அதனால என்னால சங்கராந்தி அன்னைக்கு ஆந்திராவுல ‘பேட்ட’ படத்துக்கு தியேட்டர்கள் எடுக்க முடியல’ என்று ரஜினிக்கு பேரதிர்ச்சி அளித்துள்ளார் ‘பேட்ட’ தெலுங்கு உரிமையை வாங்கியுள்ள தயாரிப்பாளர்.
ரஜினிக்கு தெலுங்கிலும் ஓரளவு நல்ல மார்க்கெட் உள்ளதால் சில ஆண்டுகளாகவே அவரது படங்கள் தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் ரிலீசாகி வந்தன. ‘கபாலி’, காலா’, எந்திரன்’ ‘2.0’ வரை இதுவே நடைமுறை.
இதே எண்ணத்தில் தயாரிப்பாளர் சி.கல்யாண் ‘பேட்ட’ படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கியிருந்தார். தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடப்படும் அதே தினம் ஆந்திராவில் சங்கராந்தி. இதே சங்கராந்தி ரிலீஸாக ஆந்திராவில் என்.டி.ஆரின் சுயசரிதைப் படம், ராம் சரணின் ‘வினய விதேய ராமா’ வெங்கடேஷின் ’எஃப்2’ ஆகிய முக்கியமான படங்கள் ரிலீஸாகின்றன.
இப்படங்கள் ஆந்திராவிலுள்ள அனைத்து முக்கிய திரையரங்குகளையும் கைப்பற்றிவிட்ட நிலையில், ரஜினிக்கு தகவல் அனுப்பிய சி.கல்யாண், ‘உங்களுக்கு பழைய மார்க்கெட் இங்க இல்ல சார். அதனால என்னால சங்கராந்தி அன்னைக்கு ஆந்திராவுல ‘பேட்ட’ படத்துக்கு தியேட்டர்கள் எடுக்க முடியல. அதனால ஜனவரி 25க்கு மேலதான் ரிலீஸ் பண்ணமுடியும்’ என்று தகவல் அனுப்பியுள்ளார். இதனால் ரஜினி பயங்கர அப்செட்டில் உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.