
தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கூறி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் நடிகையும், அரசியல்வாதியுமான ரம்யா.
கன்னட நடிகையான இவர் தமிழில், குத்து, சிங்கம் புலி, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் போன்ற பல படங்களில் நடித்து பெயர்பெற்றவர். அதே போல் கன்னடத்தில் முன்னணி நாயகியாகவும் இருந்தவர். பின் காங்கிரஸ் அணியில் இணைத்து பணியாற்றி எம்.பியாகவும் ஆனார்.
இவரை அரசியலுக்கு கொண்டு வந்ததில் பிரபல கன்னட நடிகர் அம்பரீஷுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.
ஆனால் அண்மையில் இவர் காலமானபோது, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை என்பதற்காக ரசிகர்களின் கண்டனத்திற்கு ஆளான முன்னாள் மண்டியா தொகுதி எம்.பி.யும், நடிகையுமான ரம்யா.
பின் இதுகுறித்து விளக்கம் கொடுத்த ரம்யா, தான் மிக அரிதாக ஏற்படும் எலும்பை அரிப்பு, அதாவது ஆஸ்டியோ பிளாஸ்டோமா என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் தன்னால் வர இயலவில்லை என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்சமூகவலைதளங்களின் பொறுப்பாளராக இருந்து வரும் ரம்யா, கடந்த டிச. 2-ஆம் தேதி மண்டியாவில் தான் தங்கியிருந்த வீட்டை இரவோடு இரவாக காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். ஆனால் தற்போது அவர் எங்கு தங்கியிருக்கிறார் என்பதும் தெரியாமல் பலர் குழப்பத்தில் உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.