
போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் (Ajith) நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வலிமை படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே 2 சிங்கிள் வெளியான நிலையில் தற்போது 3-ம் சிங்கிளின் விசில் தீம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பீஸ்ட் படத்திலிருந்து ஜனவரி 1-ம் தேதி முதல் சிங்கிள் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய டாக்டர் படம் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இவ்வாறு அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் அடுத்ததாக விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி உள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, ரெடின், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
சுமார் 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. இதையடுத்து பின்னணி பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.