பாட்ஷா படத்தில் முதலில் நடித்திருக்க வேண்டியது யார் தெரியுமா?

By Kanimozhi Pannerselvam  |  First Published Aug 27, 2021, 10:40 PM IST

இந்த படத்தில் மாணிக்கம் பாட்ஷாவாக மாற முக்கியமான கதாபாத்திரமாக அன்வர் பாட்ஷா என்ற கதாபாத்திரத்தில் சரண் ராஜ் நடித்திருப்பார். 


சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியானா ’பாட்ஷா’ இன்றும் வசூல் சாதனை செய்த படங்களின் பட்டியலில் தனி இடம் பிடித்துள்ளது. மும்பை டான் பாட்ஷாவாகவும், ஆட்டோக்காரர் மாணிக்கமாகவும் வில்லனாக நடித்த மார்க் ஆண்டனியை மட்டுமல்ல ஸ்டைலிஷ் நடிப்பில் ரசிகர்களையும் மிரட்டியிருப்பார் ரஜினி. 

Tap to resize

Latest Videos

‘நான் ஒரு தடவை சொன்னா’ என்று ரஜினி பேசிய வசனத்தை, இன்றைய 2K கிட்ஸ்களும் சொல்லிக்கொண்டு திரிவதை காணமுடிவதே படத்தின் வெற்றியை பறைசாற்றுகிறது. “நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கைவிடமாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறையக் கொடுப்பான். ஆனா, கைவிட்டுடுவான்” என விதவிதமான பஞ்ச் டைலாக்குகள் ரஜினிக்காக இடம் பெற்றிருக்கும். 

இந்த படத்தில் மாணிக்கம் பாட்ஷாவாக மாற முக்கியமான கதாபாத்திரமாக அன்வர் பாட்ஷா என்ற கதாபாத்திரத்தில் சரண் ராஜ் நடித்திருப்பார். ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி தானாம்.  அதற்கு முன்னதாகவே மம்முட்டி ரஜினிகாந்திற்கு நண்பனாக தளபதி படத்தில் நடித்திருந்ததால், வேறு ஒருவரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்குமே ரஜினி சொல்லவே தான், இந்த கதாபாத்திரத்தில் நடிகர் சரண் ராஜ் கமிட்ட செய்யப்பட்டுள்ளார். 

click me!