'கூகுள் குட்டப்பன்' ஆம்பளையா.. பொம்பளையா...? கலகலப்பான டீஸர் வெளியானது!

By manimegalai a  |  First Published Aug 27, 2021, 6:53 PM IST

பிக் பாஸ் லாஸ்யா, மற்றும் தர்ஷன் நடிப்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள 'கூகுள் குட்டப்பன்' படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பது பெற்று வருகிறது.
 


பிக் பாஸ் லாஸ்யா, மற்றும் தர்ஷன் நடிப்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள 'கூகுள் குட்டப்பன்' படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பது பெற்று வருகிறது.

சமீபகாலமாக மலையாளம், தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 'ஆண்ட்ராய்டு குச்சுப்பன்' என்கிற மலையாளப் படத்தின் ரீமேக்காக தற்போது 'கூகுள் குட்டப்பன்' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி 'பிரெண்ட்ஷிப்' படத்தில் நடிகையாக அறிமுகமான, லாஸ்யா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் நற்பெயரை பெற்று, கடைசிநேரத்தில் வெளியேறிய தர்ஷன் நடித்துள்ளார்.  மேலும் கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, யோகி பாபு, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

இப்படம் அமெரிக்கப் படமான 'Robert and Frank' என்ற படத்தை தழுவியே ,மலையாளத்தில் 'ஆன்ராய்டு குஞ்சுப்பன்' என்ற பெயரில் எடுக்கப்பட்டது. வெளிநாட்டில் வேலை செய்கிற மகன், தன்னுடைய தந்தை தனியாக இருப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவருக்கு ஒரு ரோபோ அனுப்புகிறார். அந்த ரோபோவுடன் சுமார் நான்கு மாதங்கள் நட்பாக பழகி அதனை தன் குடும்பத்தில் ஒருவராக நினைக்க துவங்கும் தந்தையிடமிருந்து, திரும்ப அந்த ரோபோவை எடுத்துச் செல்லும் போது நடக்கும் பிரச்சினைகளை எப்படி கதாநாயகன் சமாளிக்கிறார் என விருவிருப்பான கதையோட்டத்துடன் இப்படம் அமைந்துள்ளது.

காமெடி, சென்டிமென்ட் , காதல், என அனைத்துக்கும் பஞ்சமில்லாமல் உருவாகியுள்ள இப்படம் தற்போது தமிழிலும் வெளியாகி ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார் நடித்துள்ளதுடன் இப்படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படத்தை கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த, சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார்.

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் சற்று முன்னர் வெளியிட்டார். ஒரு ரோபோ, சமையல் செய்வது, நாற்று நடுவது, களை எடுப்பது போன்றவற்றை ஒரு கிராமமே ஆச்சர்யமாக பாற்படுத்துன்... அது ஆம்பளையா? பொம்பளையா? என்கிற டிகஷனும் நடக்கிறது. அதே போல் லாஸ்லியா, தர்ஷனின் சில ரொமான்டிக் காட்சிகளும் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் டீசர் இதோ... 
 

Happy to launch the teaser of - https://t.co/RnMIzc7hiE

Best wishes to sir & the entire team for a huge success😊👍 pic.twitter.com/PMLe8a7WzN

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan)

click me!