தயாரிப்பாளர் உட்பட மூன்று பேர் மீது நடிகர் விமல் பரபரப்பு புகார்!

By manimegalai a  |  First Published Aug 27, 2021, 6:29 PM IST

தன்னை ஏமாற்றி விட்டதாக, பிரபல நடிகர் விமல் சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில், கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


தன்னை ஏமாற்றி விட்டதாக, பிரபல நடிகர் விமல் சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில், கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நடிகர் விமல் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது...  கடந்த 2016ஆம் ஆண்டு, இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கிய 'மன்னர் வகையறா' என்ற படத்தில், தான் நடித்ததாகவும், பணப் பிரச்சினை காரணமாக அந்தப்படத்தை A3V என்கிற நிறுவனம் மூலம் தான் வெளியிட்டதாக கூறியுள்ளார். இதற்கு பைனான்சியர் சிங்காரவேலன், கோபி ஆகியோர் படத்தை தயாரிக்க பணம் ஏற்பாடு செய்து தந்ததாகவும், அவர்களை நம்பி பல காசோலைகள் மற்றும் ஆவணங்களில் போட்டதாகவும் தெரிவித்துள்ளார் விமல்.

Tap to resize

Latest Videos

இந்த படத்தை தயாரிக்க ரூபாய் 3 கோடி செலவானது குறிப்பிட்டுள்ளார். அதனை விற்பனை செய்ததில் 4 கோடி ரூபாய் கிடைத்ததாக சிங்காரவேலன் தெரிவித்ததாகவும், அந்த நான்கு கோடி ரூபாய் பணத்தையும் கடனாக வாங்கிய பணத்திற்கான வட்டிக்கே சென்று விட்டதாக சிங்காரவேலன் தன்னிடம் தெரிவித்தார். எனவே அவருக்கு கொடுக்கவேண்டிய மூன்று கோடி பணத்தை எதிர்வரும் காலத்தில் படங்களில் நடித்து அதன் மூலம் வரும் சம்பளத்தை கொடுத்தே கடனை அடைத்தேன்.

ஆனால் 'மன்னர் வகையறா' படம் ரூபாய் 8 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட தகவலை தன்னிடம் சிங்காரவேலன் மறைத்து விட்டார். எனவே தயாரிப்பு நிறுவனம் நிறுவனத்தை தவறாக பயன்படுத்தி பல ஆவணங்கள் மற்றும் காசோலைகளில் கையெழுத்து வாங்கி பணமோசடி செய்த தயாரிப்பாளர் சிங்காரவேலன் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் விமல் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மூவர் மீதும் வழக்கு தொடர்வதற்கான உத்தரவை பெற்ற பின்பே விருகம்பாக்கம் போலீசில் சிங்காரவேல் உள்ளிட்ட 3 மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!