முதல் முறையாக ஹாலிவுட் படம் எடுக்கும் சிவாஜி புரடொக்ஷன்ஸ்...

 
Published : Apr 22, 2017, 03:14 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
முதல் முறையாக ஹாலிவுட் படம் எடுக்கும் சிவாஜி புரடொக்ஷன்ஸ்...

சுருக்கம்

firsh hollywood movie produced siviaji productions

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனமும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தர்லின் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஹாலிவுட் திரைப்படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு 'கமிஷண்ட்' (Commissioned) என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கிபி 52ஆம் ஆண்டில் வாழ்ந்த புனித தாமஸ் என்பவர் இந்தியாவில் பயணம் மேற்கொண்டபோது நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்களை வைத்து மிகவும் காமெடியாக இந்த படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், இந்த படம் வரும் 2018ஆம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் இந்த படத்தில் இந்திய மற்றும் ஹாலிவுட் கலைஞர்கள் பங்கு பெற உள்ளனர் என்றும், கேரளா, சென்னை மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!