கடும் மோதலில் ரஜினி - தனுஷ்... படாதபாடு படும் ரசிகர்கள்... சிக்கித் தவிக்கும் யூ-டியூப்...!

Published : Dec 02, 2019, 01:11 PM ISTUpdated : Dec 02, 2019, 01:16 PM IST
கடும் மோதலில் ரஜினி - தனுஷ்... படாதபாடு படும் ரசிகர்கள்... சிக்கித் தவிக்கும் யூ-டியூப்...!

சுருக்கம்

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஆன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும், முன்னணி நடிகரும் அவரது மாப்பிள்ளையுமான தனுஷுற்கும் இடையே ஒரு விஷயத்தில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஆன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும், முன்னணி நடிகரும் அவரது மாப்பிள்ளையுமான தனுஷுற்கும் இடையே ஒரு விஷயத்தில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் "தர்பார்" படத்தில் நடித்து முடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிரூத் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த் "ஆதித்யா அருணாசலம்" என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதால், புரோமோஷன் வேலைகள் தீயாய் நடைபெற்று வருகின்றன. 

சமீபத்தில் அனிரூத் இசையில், விவேக் வரிகளில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய "சும்மா கிழி" பாடல் வெளியிடப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இண்ட்ரோ பாடலான இது சபரிமலை ஐயப்பன் பாடலின் காப்பி என்ற விமர்சனத்தை பெற்றாலும், யூ-டியூப் ட்ரெண்டிங்கில் இன்று வரை முதலிடம் பிடித்துள்ளது. இந்த சமயத்தில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள "பட்டாஸ்" படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது. 

"ச்சில் ப்ரோ" என்ற தலைப்பில் நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அந்த பாடல் சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது. "பேட்ட பாய்" எனத் தொடங்கும் அந்தப் பாடலை தனுஷ் ரசிகர்கள் வெற லெவலுக்கு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.  ஒரே நாளில் 9 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ள இந்த பாடல் யூ-டியூப் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. யூ-டியூப் ட்ரெண்டிங்கில் இந்த இரண்டு பாடல்களுமே கடும் போட்டி போட்டு வரும் நிலையில், யார் பாடலை, எந்த பாடல் பின்னுக்குத் தள்ளப் போகிறதோ என்ற பதற்றம் ரசிகர்களிடையே பாடாய்படுத்தி வருகிறது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?