மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் மரணம் - சோகத்தில் ரசிகர்கள்

Published : May 09, 2025, 03:20 PM IST
மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் மரணம் - சோகத்தில் ரசிகர்கள்

சுருக்கம்

மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல இயக்குநர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Fifty Shades Director James Foley Passed Away : பிரபல அமெரிக்க இயக்குநர் ஜேம்ஸ் ஃபோலி (James Foley) காலமானார். மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் தூக்கத்தில் மரணமடைந்தார். ஹாலிவுட்டில் அவரது மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 71. இதனை ஃபோலியின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். "கடந்த சில ஆண்டுகளாக மூளைப் புற்றுநோயுடன் போராடி வந்த அவர் காலமானார்," என்று ஹாலிவுட் ஊடகங்களுக்கு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

யார் இந்த ஜேம்ஸ் ஃபோலி?

1953 டிசம்பர் 28 இல் நியூயார்க்கில் உள்ள புரூக்ளினில் பிறந்த ஃபோலி, 1984 இல் வெளியான 'ரெக்லெஸ்' படத்தின் மூலம் தனது இயக்குநர் வாழ்க்கையைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து 1986 இல் வெளியான 'எட் க்ளோஸ் ரேஞ்ச்' படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. சீன் பென் மற்றும் கிறிஸ்டோபர் வால்கன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

ஃபோலி இயக்கிய முக்கியமான படங்களில் 1992 இல் வெளியான 'க்ளென்கேரி க்ளென் ரோஸ்', 1996 இல் வெளியான உளவியல் த்ரில்லர் 'ஃபியர்' ஆகியவை அடங்கும். காதல் வகை படமான ஃபிஃப்டி ஷேட்ஸ் தொடரின் மூலமும் ரசிகர்களை கவர்ந்தார். 2017, 2018 இல் வெளியான காதல் நாடகங்களான 'ஃபிஃப்டி ஷேட்ஸ் டார்க்கர்' மற்றும் 'ஃபிஃப்டி ஷேட்ஸ் ஃப்ரீட்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

சின்னத்திரையிலும் தடம் பதித்த ஜேம்ஸ் ஃபோலி

தொலைக்காட்சித் துறையிலும் ஃபோலி தனது திறமையை வெளிப்படுத்தினார். குறிப்பாக நெட்ஃபிளிக்ஸ் தொடரான 'ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்', 'ட்வின் பீக்ஸ்' போன்ற பிரபல தொடர்களை இயக்கியுள்ளார்.

இசை வீடியோக்களிலும் ஃபோலி தனது முத்திரையை பதித்தார். மடோனாவின் பிரபல இசை வீடியோக்களான ‘லிவ் டு டெல்’ அவரது இயக்கத்தில் உருவானது. ஃபோலி மறைந்தாலும், அவரது படைப்புகள், சினிமா உலகில் என்றும் நிலைத்திருக்கும். அவருக்கு சகோதர சகோதரிகள் உள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மாட்டிக்கிட்டோம் என்று தெரிந்து நாடகமாடிய தங்கமயில்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: அப்பாவை கட்டிப்பிடித்து கதறி அழுத சரவணன் : கூலா வேடிக்கை பார்த்த மயில்!