கரையான் அரித்து 1 லட்சத்தை இழந்த ஏழைப்பெண்; கடவுள் போல் வந்து உதவிய ராகவா லாரன்ஸ்!

Published : May 09, 2025, 08:44 AM IST
கரையான் அரித்து 1 லட்சத்தை இழந்த ஏழைப்பெண்; கடவுள் போல் வந்து உதவிய ராகவா லாரன்ஸ்!

சுருக்கம்

ஏழைப் பெண் ஒருவர் சிறுக சிறுக சேமித்த பணத்தை கரையான் அரித்துவிட்டதை அறிந்த ராகவா லாரன்ஸ் அந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளார்.

Raghava Lawrence Gifted 1 Lakh Rupees To Poor Girl : நடிகர், இயக்குனர், டான்ஸ் மாஸ்டர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் சினிமாவில் நடிப்பதை தாண்டி, ஏழை எளியவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக மாற்றம் என்கிற தொண்டு நிறுவனத்தையும் தொடங்கி அதன்மூலம் பலருக்கு உதவி வருகிறார். இந்த நிலையில், அவர் தற்போது ஏழைப்பெண் ஒருவருக்கு செய்துள்ள உதவி, சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

உண்டியலில் சேர்த்து வைத்த 1 லட்சம் ரூபாய்

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே உள்ள சுக்கனாம்பட்டியை சேர்ந்தவர் முத்துக்கருப்பி. இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். முத்துக்கருப்பியும் அவரது கணவர் குமாரும் கூலித் தொழிலாளர்கள். இவர்கள் இருவரும் தங்கள் மகளின் காதணி விழாவுக்காக கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வைத்திருக்கிறார்கள். தகர உண்டியலில் அவர் சேமித்து வைத்த பணத்தை, வீட்டிலேயே குழி தோண்டி புதைத்து பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.

1 லட்சம் ரூபாயை அரித்த கரையான்

அந்த உண்டியலில் 1 லட்சம் ரூபாய் சேர்த்துள்ளனர். அண்மையில் பெய்த கனமழையால் அந்த தகர உண்டியலுக்குள் கரையான் புகுந்து அதில் இருந்த ரூபாய் நோட்டுக்களை அரித்திருக்கின்றன. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் முத்துக்கருப்பி அந்த தகர உண்டியலை எடுத்து திறந்து பார்க்கும்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த உண்டியலில் இருந்த ரூபாய் நோட்டுக்கள் அனைத்தையும் கரையான் அரித்து சேதப்படுத்தி இருந்தது. இதனால் செய்வதறியாது திகைத்துப் போய் இருக்கிறார் முத்துக்கருப்பி.

அரித்த ரூபாய் நோட்டுக்களை பார்த்து கண்ணீர் சிந்திய முத்துக்கருப்பி, தன் பிள்ளைகள் முன் அந்த ரூபாய் நோட்டை பார்த்து கதறி அழுத வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பலரது மனதையும் உருக வைத்தது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து அறிந்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர், அந்த ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி மூலம் மாற்றித் தருவதற்கான பரிந்துரையை வங்கி மூலம் செய்திருந்தார்.

ராகவா லாரன்ஸ் செய்த உதவி

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட நடிகர் ராகவா லாரன்ஸ், தனது மாற்றம் தொண்டு நிறுவனத்தின் மூலம் முத்துக்கருப்பிக்கு உதவி முடிவெடுத்தார். இதையடுத்து அவரை சென்னைக்கு வரவழைத்து, அவர்கள் இழந்த தொகையை அவர்களுக்கு பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவர் கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்ட முத்துக்கருப்பு, லாரன்ஸுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மாட்டிக்கிட்டோம் என்று தெரிந்து நாடகமாடிய தங்கமயில்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: அப்பாவை கட்டிப்பிடித்து கதறி அழுத சரவணன் : கூலா வேடிக்கை பார்த்த மயில்!