
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா 2வது அலையின் தீவிரம் அதிகரித்து வருவதால் ஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பில் இருந்த விஜய், ஐதராபாத்தில் அண்ணாத்த ஷூட்டிங்கில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் அவசர, அவசரமாக சென்னை திரும்பியுள்ளனர். சீரியல் படப்பிடிப்புகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்று ஃபெப்சி தொழிலாளர்கள் சங்கம் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியதாவது: சினிமா படபிடிப்புகளில் ஃபெப்சி தொழிலாளர்கள் பங்கேற்கவில்லை. 16 சீரியல்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தது. ஆனால் நாளை முதல் சின்னத்திரை படப்புகளில் பங்கேற்பதையும் ரத்து செய்கிறோம். எங்களை பாதுகாக்க யாரும் இல்லை என்பது போன்ற நிலை உருவாகியுள்ளது. கொரோனா 2வது அலையின் ஆபத்தை உணர்ந்து மே 31ம் தேதி வரை படப்பிடிப்பில் பங்கேற்கப்போவதில்லை என முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.