‘ஃபெப்சி தொழிலாளர்கள் உயிரை காப்பாற்றுங்கள்’... திரைப்பிரபலங்களுக்கு ஆர்.கே.செல்வமணி வைத்த அதிரடி கோரிக்கை...!

By Kanimozhi PannerselvamFirst Published May 15, 2021, 1:21 PM IST
Highlights

இந்நிலையில் ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது

கொரோனா 2வது அலை கோலிவுட் திரையுலகினரை சுழட்டி அடித்து வருகிறது. ஏற்கனவே பல மாதங்கள் வேலை இல்லாமல் தவித்த ஃபெப்சி தொழிலாளர்கள், துணை நடிகர்கள் உள்ளிட்டோர் அனுபவித்த கஷ்டங்கள் சொல்லில் அடங்காது. இந்நிலையில் மே 24ம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: கொரோனா லாக்டவுன் நேரத்தில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் நிதி உதவி வழங்குவதை விட, தயாரிப்பாளர் ஒருவருக்கு தேதி கொடுத்து படம் எடுக்க உதவினால் அதன் மூலம் கிடைக்கும் தொகை ஃபெப்சி தொழிலாளர்கள் நலன் காக்க உதவும். இதனால் பிறரிடம் உதவிக்கேட்க வேண்டிய நிலை ஃபெப்சி அமைப்பிற்கு ஏற்படாது. ஓடிடி மூலமாக கூட அந்த படத்தை வெளியிட்டலாம்.

கடந்த முறையை விட இந்த முறை கொரோனா தொற்றால் நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உங்களுக்கு திரையுலகில் 50 ஆண்டுகளாக பணியாற்றும் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு திரையுலகினரின் கடமை. கொரோனா நெருக்கடி நேரத்தில் ஃபெப்சி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் உயிரைக் காக்கும் விதமாக படம் எடுக்க திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் உதவ முன்வர வேண்டும். இதன் மூலம் ஃபெப்சி தொழிலாளர்களின் உயிர் காக்க உதவுங்கள் என ஆர்.கே.செல்வமணி உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். 
 

click me!