சட்டவிரோதமாக ஓட்டல்களில் 'ஜெய்பீம்'? கண்டுகொள்ளாத சூர்யா... எகிறும் கண்டனங்கள்..!

By manimegalai aFirst Published Nov 2, 2021, 10:53 AM IST
Highlights

இன்று (நவம்பர் 2)  ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள 'ஜெய் பீம்' படத்தை சட்ட விரோதமாக தாபா ஓட்டல்களில் சூர்யாவின் ரசிகர்கள் திரையிட முயற்சித்து வருவதாக கூறப்படுவதை தொடர்ந்து, தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள், சூர்யாவுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இன்று (நவம்பர் 2)  ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள 'ஜெய் பீம்' படத்தை சட்ட விரோதமாக தாபா ஓட்டல்களில் சூர்யாவின் ரசிகர்கள் திரையிட முயற்சித்து வருவதாக கூறப்படுவதை தொடர்ந்து, தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள், சூர்யாவுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: இது ரொம்ப ஓவர்... உடலில் எண்ணையை தடவி... ஜாக்கெட் போடாமல் போஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் பிரகதி!

சூர்யா தான் தயாரித்து நடிக்கும் படங்களை, தொடர்ந்து ஓடிடி பிளாட் ஃபாம்மில் வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதே நேரம், திரையரங்கில் முதலில் வெளியிடாமல் ஓடிடி தளத்தில் வெளியிடும் படங்களை திரையரங்கில் வெளியிட மாட்டோம் என்பதில் திரையரங்கு உரிமையாளர்களும் உறுதியாக உள்ளனர்.  திரையரங்கில் வெளியாகி 21 நாட்களுக்கு பின்னர் ஓடிடி தளத்தில் வெளியிட எந்த தடையும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த இன்று ஓடிடி தளத்தில் வெளியான நடிகர் சூர்யாவின், 'ஜெய்பீம்' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் சூர்யாவின் ரசிகர்கள், 'ஜெய் பீம்' படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகாவிட்டாலும், ஏதேனும் ஒரு விதத்தில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெளியிடப் போவதாக, தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: பக்கத்தில் மது... கையில் சீட்டு கட்டு... கணவருடன் ரொமான்டிக் போஸில் போதை ஏற்றும் காஜல் அகர்வால்!

 

அந்த வகையில் திருப்பூர் மாவட்ட ரசிகர் மன்றத்தை சேர்த்தவர்கள், அவிநாசியில் உள்ள தாபா ஓட்டல் ஒன்றில் நள்ளிரவு 12:30 மணி மற்றும் அதிகாலை 4:00 மணிக்கு படத்தை வெளியிட முயற்சி செய்து வருவதாக வெளியான தகவலுக்கு, தியேட்டர் உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: காத்து வாங்க ரொம்ப வசதியா... ஓப்பன் ட்ரெஸ்ஸில் மொத்த அழகையும் காட்டிய அஞ்சலி! கிறுகிறுத்து போன ரசிகர்கள்!

 

இதுகுறித்து, தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது, "தமிழக அரசின் திரைப்பட ஒளிப்பதிவு சட்டப்படி, உரிமம் பெற்ற திரையரங்கில் மட்டுமே வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 'ஜெய்பீம்' படத்தை, பொது வெளியில், தாபா ஓட்டல்களில் திரையிட சூர்யாவின் ரசிகர்கள் முயற்சித்து வரும் சம்பவம் மிகவும் கண்டிக்க தக்கது. 'நீட்'  தேர்வு மற்றும் வேளாண் சட்டங் களை எதிர்த்து குரல் கொடுக்கும் இவர், தன்னுடைய ரசிகர்கள் செய்யும்  சட்டவிரோதமான செயலை தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால் அதனை செய்யாமல் தொடர்ந்து சூர்யா மௌனம் காத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து தமிழக முதல்வருக்கு புகார் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!