அந்த யங் லுக், அருவா மீசை அமர்க்களமாக இருந்தது தலைவா! பேட்ட பற்றி ரசிகர்களின் மரண மாஸ் விமர்சனம்...

By sathish kFirst Published Jan 13, 2019, 3:13 PM IST
Highlights

பேட்ட இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் காட்சிகளுக்கு இன்னும் கூடுதல் ஸ்பேஸ் கொடுத்திருந்தால் படம் இன்னும் மாசாக இருந்திருக்கும். ரஜினியின் அந்த யங் லுக் & அருவா மீசை அமர்க்களமாக இருந்தது!

ரோகினி என்பவர்; பேட்ட   தலைவர் அதிரடி. சூப்பர் ஸ்டாரை திரையில் எப்படி பார்க்க ரசிகர்கள் ஆசைப்படுகிறார்களோ அவரை அப்படியே செதுக்கி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ரஞ்சித்கள் கற்றுக்கொள்ள வேண்டும். கபாலி , காலாவை விட அவரை அணு அணுவாய் ரசிக்கலாம். ரஜினி விஜய் சேதுபதிக்கு தரும் பினிசிங் டுவிஸ்ட் மரண மாஸ்.. சசிகுமார் , சிம்ரன் , த்ரிஷா, பாபி சிம்ஹா, மாளவிகா எல்லாரும் ரசிச்சு நடிச்சுருக்காங்க. சண்டைக்காட்சிகளுக்கும் , பாடல் காட்சிகளுக்கும் ரசிகர்களை மகிழ்விக்க சூப்பர் ஸ்டார் எடுத்த மெனக்கெடலில் பேட்ட பராக் பராக் பராக்

ஷ்ருதி : 'அதான் ஒரு மணிக்கு நம்ம "பேட்ட" பார்க்கபோறோமே, இப்போ எதுக்கு " கொடி பறக்குது" பார்த்துட்டு உக்காந்துட்டு இருக்க ?'

டேடி : 'vintage ரஜினியை பார்த்து வெறியேத்திட்டு இருக்கேன்!'

Deiysee Edwin  பேட்ட,விசுவாசம் இரண்டும் அதகளப்படுத்தி பொங்கலை இப்பொழுதே தித்திப்பாக்கிவிட்டது. இரண்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள் - இந்த பொங்கல் இந்த இரண்டு படங்களோடு மரணமாஸ் 🎉🎉🎉🎉
Just enjoy n celebrate 🎉 these two films and avoid /away from debates here in Fb this is time to celebrate not to debate .

ஹேமலதா;  ரஜினி என்ற சூப்பர் ஸ்டார் பிம்பத்துக்குத் தீனி போடும்படியான படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி எழுந்து விவாதமாக உருபெற்றுள்ளது. ரஜினி ரசிகனால் மட்டுமே அதைச் சாத்தியப்படுத்த முடியும் எனக் கூறப்பட்டபோது ரஜினி வெறியன் எனத் தன்னை அறிவித்துக்கொண்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், பேட்ட படத்தின் மூலம் அது நிறைவேறியுள்ளதாக ரசிகர்கள் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அமித் ; ரஜினியுடன் இத்தனை நடிகர், நடிகைகள் நடித்துள்ளனரே இது ரஜினி படமா அல்லது பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ள படமா என்ற கேள்வி எழுந்தது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ரஜினியை வலம்வரவைத்து இது முழுக்க ரஜினி படம் என்பதை நிரூபித்துள்ளார் இயக்குநர்.

விக்ரம்; . ரஜினியின் முதல் படத்திலிருந்து இப்போது வரை அவர் நடித்த மாஸ் காட்சிகளை எல்லாம் நினைவுபடுத்தும் விதமாகப் பல காட்சிகளை உருவாக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். குறிப்பிட்ட படங்களில் குறிப்பிட்ட காட்சிகள் மனதைக் கவர்ந்தது என்பதற்காக அந்தக் காட்சிகளை எல்லாம் தொகுத்து திரைக்கதையில் அடுக்கினால் ‘மாஸ்’ உருவாகிவிடும் என்று நினைத்துச் செய்துள்ளனர். உதாரணமாகக் கேட்டைத் திறந்து ரஜினி உள்ளே நுழையும் காட்சி பிரபலம் என்பதற்காகப் படம் முழுக்க வெவ்வேறு இடங்களில் சுமார் பத்து கேட்டுகளை ரஜினி திறக்கிறார்.

பேட்ட இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் காட்சிகளுக்கு இன்னும் கூடுதல் ஸ்பேஸ் கொடுத்திருந்தால் படம் இன்னும் மாசாக இருந்திருக்கும். ரஜினியின் அந்த யங் லுக் & அருவா மீசை அமர்க்களமாக இருந்தது!

click me!