'இளையராஜா 75 ' க்காக ஒரே நேரத்தில் 10 கதாநாயகர்கள் செய்த செயல்!

Published : Jan 13, 2019, 01:51 PM ISTUpdated : Jan 13, 2019, 04:11 PM IST
'இளையராஜா 75 ' க்காக ஒரே நேரத்தில் 10 கதாநாயகர்கள் செய்த செயல்!

சுருக்கம்

2019-ம் ஆண்டு துவங்கியதும் இசைஞானி "இளையராஜா75" இசை விழாவுக்காக  இசைப்பிரியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழங்கும்  மாஸ்டரோ இசைஞானி இளையராஜாவின் ‘இளையராஜா75’ நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை  துவக்க விழா சமீபத்தில்   மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில்  பிரம்மாண்டமாக  நடை பெற்றது.  

2019-ம் ஆண்டு துவங்கியதும் இசைஞானி "இளையராஜா75" இசை விழாவுக்காக  இசைப்பிரியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழங்கும்  மாஸ்டரோ இசைஞானி இளையராஜாவின் ‘இளையராஜா75’ நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை  துவக்க விழா சமீபத்தில்   மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில்  பிரம்மாண்டமாக  நடை பெற்றது. அதை தொடர்ந்து  டிக்கெட் விற்பனை புக் மை ஷோ ஆன்லைனில்  பரபரப்பாக விற்பனையாகி கொண்டிருக்கிறது.  

 பிப்ரவரி 2,3, தேதிகளில், நந்தனம் YMCA மைதானத்தில்  - கலை நிகழ்ச்சிகள்,நடன நிகழ்ச்சிகள், அரங்கு தோற்றம், பிரம்மாண்டமான LED அகன்ற திரை இப்படி பார்ப்போரை பரவசப்படுத்தும் அனைத்து வேலைகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

'இளையராஜா75' டீசர்  பல உருவாக்கப்பட்டது . அதை,நேற்று மாலை 6 மணிக்கு ஒரே நேரத்தில்  விஷால், ,கார்த்தி,விஜய்சேதுபதி, ஜெயம் ரவி,ஆர்யா, விஷ்ணு விஷால் ஜீவா, ,அதர்வா, சந்தானம் மற்றும் நந்தா ஆகிய 10 கதாநாயகர்கள் ட்வீட் செய்தனர். இவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்நிகழ்ச்சியில் நாங்களும் பங்கு பெறுகிறோம் என்று வீடியோ பதிவேற்றம் செய்து ரசிகர்களையும் வரவேற்று பரவசப்படுத்தியுள்ளார்கள்.

பிப்ரவரி 2-ம் தேதி இசைஞானி  இளையராஜா அனைத்து மொழி ஜாம்பவான்ங்களுடன் இணைந்து பணியாற்றியதை நினைவு கூர்ந்து கௌரவிக்கும்  விதமாக   கலைஞர்கள் இளையராஜாவின் பாடல்களுக்கு  நடனமாடுகிறார்கள். 

இதனை இளையராஜாவும், ரசிகர்களுடன் அமர்ந்து ரசிக்கிறார். அடுத்தநாள் 3-ம் தேதி இளையராஜா அவரது குழுவினருடன் சேர்ந்து நிகழ்த்தும் மாபெரும் இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக அமைக்கப்படும் மேடையில் நடை பெறுகிறது. இந்த இரண்டு நாள் விழாவுக்கான டிக்கெட்  நாளுக்கு நாள்  வேகமாக விற்பனை அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?