பரபரப்பான அவதூறு போஸ்டர்கள்... ரசிகர் மன்றத்தைக் கலைக்கிறாரா நடிகர் தனுஷ்?...

Published : Apr 09, 2019, 11:13 AM IST
பரபரப்பான  அவதூறு போஸ்டர்கள்... ரசிகர் மன்றத்தைக் கலைக்கிறாரா நடிகர் தனுஷ்?...

சுருக்கம்

’ஊர்,உலகமெல்லாம் உங்களை ஒரு ஹீரோவாக ஏற்றுக்கொள்ளாதபோது உடன் நின்ற எங்களைக் கைவிடலாமா தலைவர் தனுஷ் அவர்களே’ என்ற பொருள்படும்படி பல்வேறு சாடல்களுடன் கூடிய போஸ்டர் ஒன்று சென்னை முழுவதும் ஒட்டப்பட்டு பரபரப்பாகியுள்ளது.  

’ஊர்,உலகமெல்லாம் உங்களை ஒரு ஹீரோவாக ஏற்றுக்கொள்ளாதபோது உடன் நின்ற எங்களைக் கைவிடலாமா தலைவர் தனுஷ் அவர்களே’ என்ற பொருள்படும்படி பல்வேறு சாடல்களுடன் கூடிய போஸ்டர் ஒன்று சென்னை முழுவதும் ஒட்டப்பட்டு பரபரப்பாகியுள்ளது.

கடந்த இரு தினங்களாக ட்விட்டர் மற்றும் வலைதளங்களில் தனுஷுக்கு எதிராக ஒரு போஸ்டர் வைரலாகிவருகிறது. அந்த போஸ்டரில் ‘இவன் எல்லாம் ஒரு ஹீரோவா? இவனுக்கெல்லாம் ஒரு ரசிகர் மன்றமா?  என்று ஆரம்பத்தில் வந்த பல அவமானங்களை தாண்டி நின்றவர்கள் நாங்கள்! ரசிகர்களை நீக்குவதற்கு தாண்டி சிவாவும்  ராஜாவும் யார்?!! 

பல தோல்விகளிலும் என்னை தாங்கிப்பிடித்த தூண்கள்! என் ரசிகர்கள்!! என் ரசிகர்களை எக்காரணம் கொண்டும் நான் கைவிடமாட்டேன்! என்று சொன்னாயே தலைவா!! ஆனால், ! உழைத்த ரசிகர்களை மறந்துவிட்டீர்களா? 

நாங்களா? உங்களை தனுஷ்-காக கட் அவுட், பேனர், போஸ்டர் என செலவு செய்ய சொன்னோம் எனறு ஆணவத்தோடு பேசிய டச் அப்மேன் எச்ச ராஜா மீது நடவடிக்கை எடு! தலைவன் தனுஷ்! நடவடிக்கை எடுக்காவிட்டால் எந்த தியேட்டரிலும் ரசிகர்கள் கொண்டாட்டம் இல்லாத படமா! என சொல்ல வைத்துவிடாதீர்கள்… நீங்கள் மறந்தால், போராட்டம் வெடிக்கும் என அந்த போஸ்டரில்  குறிப்பிடப்பட்டுள்ளது. 

போஸ்டரில் இடம்பெற்றுள்ள சில கருத்துகள் குழப்பமாக இருந்தாலும் தனுஷின் ரசிகர் மன்றத்தில் ஏதோ ஒரு பெரிய உள்நாட்டுக் கழகம் இருப்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. இப்பஞ்சாயத்தில் சம்பந்தப்பட்ட சிலர் ‘தலைவா அஜீத் மாதிரி பேசாம ரசிகர் மன்றத்தைக் கலைத்துவிடு’ என்று ஐடியாவும் கொடுத்திருக்கிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?