கேப்டன் விஜயகாந்த் 1 நிமிடம் 46 விநாடிகள் பேசும் வீடியோ இதோ...

Published : Apr 09, 2019, 10:32 AM IST
கேப்டன் விஜயகாந்த் 1 நிமிடம் 46 விநாடிகள் பேசும் வீடியோ இதோ...

சுருக்கம்

சமீபகாலமாக கேப்டன் விஜயகாந்தால் ஒரு வார்த்தை கூட பேசமுடியவில்லை என்ற செய்திகள் பயங்கரமாகப் பரவிவரும் நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி பதில் பகுதி ஒன்றை வீடியோவாக வெளியிட்டு தனது அபிமானிகள் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார் விஜயகாந்த்.

சமீபகாலமாக கேப்டன் விஜயகாந்தால் ஒரு வார்த்தை கூட பேசமுடியவில்லை என்ற செய்திகள் பயங்கரமாகப் பரவிவரும் நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி பதில் பகுதி ஒன்றை வீடியோவாக வெளியிட்டு தனது அபிமானிகள் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார் விஜயகாந்த்.

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் தமிழகம் திரும்பிவிட்டதால், இம்முறை பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரச்சாரக் களத்துக்கு விஜயகாந்த் வரவே இல்லை. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் 'கேப்டன் குரல்' என்ற பெயரில் விஜயகாந்த் பேட்டியொன்றை வெளியிட்டுள்ளனர். இப்பேட்டி 1 நிமிடம் 46 விநாடிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதில் நேர்காணல் செய்பவர் கேட்கும் அனைத்து கேள்விகளுக்குமே ஒற்றை வரியிலேயே பதிலளித்துள்ளார் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோ பேட்டியில் இடம்பெற்றுள்ள கேள்விகளும் அவற்றுக்கு விஜயகாந்த் அளித்துள்ள பதில்களும்...

பேட்டியாளர்: வணக்கம் கேப்டன்

விஜயகாந்த்: வணக்கம் சார்

பேட்டியாளர்: எப்படி இருக்கீங்க கேப்டன்?

விஜயகாந்த்: நல்லா இருக்கேன் சார் நான்

பேட்டியாளர்: உடல்நிலை எல்லாம் எப்படியிருக்கு?

விஜயகாந்த்: உடல்நிலை எல்லாம் நல்லாயிருக்கு

பேட்டியாளர்: அமெரிக்கா போயிட்டு வந்ததுக்கு அப்புறம் எந்த அளவுக்கு முன்னேற்றம் இருக்கு?

விஜயகாந்த்: நல்லாயிருக்கேன்... நல்லாயிருக்கேன்

பேட்டியாளர்: தமிழக மக்கள் எல்லாருமே இந்தத் தேர்தலைப் பொறுத்த அளவுக்கு, மற்ற பிரச்சாரங்களை விட தேமுதிக தலைவர் எப்போது வருவார், என்ன பேசுவார் என்று காத்துட்டு இருக்காங்க?

விஜயகாந்த்: கூடிய விரைவில் வருவேன் சார். என்ன பேசுவேன் என்பதை அங்கு வந்து கேட்கச் சொல்லுங்கள்

பேட்டியாளர்: தொடர்ச்சியா பிரச்சாரத்துக்குப் போவீங்க?

விஜயகாந்த்: அது டாக்டர் அட்வைஸ் படி தான் செய்ய முடியும்.
பேட்டியாளர்: இப்போ அதிமுக - தேமுதிக கூட்டணி எப்படியிருக்கு கேப்டன்

விஜயகாந்த்: அதிமுக கூட்டணி தான் ஜெயிக்கும்; திமுக கூட்டணி தோற்கும்
பேட்டியாளர்: ஏன் திமுக கூட்டணி தோற்கும் என்று சொல்கிறீர்கள்?

விஜயகாந்த்: திமுக - தில்லு முல்லு கட்சி
பேட்டியாளர்: அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையேயான போட்டி எப்படியிருக்கு கேப்டன்?

விஜயகாந்த்: தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் நடக்கின்ற போட்டி
பேட்டியாளர்:அதில் நிச்சயமாக அதிமுக - தேமுதிக வெற்றி.. (என முடிக்கும் முன்பே)

விஜயகாந்த்: தர்மம் தான் ஜெயிக்கும்... தர்மம் தான் ஜெயிக்கும்.
பேட்டியாளர்: பிரதமர் மோடியைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

விஜயகாந்த்: மோடி நல்லவர். அவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்.
பேட்டியாளர்: தேமுதிக தொண்டர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

விஜயகாந்த்: நல்லா உழைக்க வேண்டும்; 40-ம் ஜெயிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வறு தன் ட்விட்டர் பக்கத்தில் இடம்பெற்றிருந்த பேட்டியில் பேசியுள்ளார் விஜயகாந்த்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Thalaivar Thambi Thalaimaiyil: பாக்ஸ் ஆபீஸ்ல இனி தம்பியோட ஆட்டம் தான்! மிரள வைக்கும் 10 நாள் வசூல் நிலவரம்!
Pandian Stores 2 Promo: சக்திவேலின் திட்டம் பலித்தது! பாண்டியன் குடும்பத்தில் வெடித்த புது பஞ்சாயத்து! பாண்டியன் ஸ்டோர்ஸில் இனி வரும் வாரங்கள் ரணகளம்!