மருத்துவமனை முன் அலைமோதும் கூட்டம்..! புனித் ராஜ்குமாரின் மரண செய்தியை கேட்டு துடித்து போன ரசிகர்கள்! வீடியோ..

Published : Oct 29, 2021, 03:22 PM ISTUpdated : Oct 29, 2021, 03:24 PM IST
மருத்துவமனை முன் அலைமோதும் கூட்டம்..! புனித் ராஜ்குமாரின் மரண செய்தியை கேட்டு துடித்து போன ரசிகர்கள்! வீடியோ..

சுருக்கம்

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் (46) (Puneeth rajkumar death) மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியானதில் இருந்தே பல ரசிகர்கள் மருத்துவமனை முன் கூடிய நிலையில், தற்போது கட்டுக்கடங்காத ரசிகர்கள் மருத்துவமனையை சூழ்ந்துள்ளனர்.  

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் (46)  மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியானதில் இருந்தே பல ரசிகர்கள் மருத்துவமனை முன் கூடிய நிலையில், தற்போது கட்டுக்கடங்காத ரசிகர்கள் மருத்துவமனையை சூழ்ந்துள்ளனர்.

குழந்தை நட்சத்திரமாக இருந்து, ஒரு ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பது என்பதும்... வாரிசு நடிகர் என்கிற பிம்பத்தை உடைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து தரப்பு ரசிகர்கள் மனதை கவர்வதும் அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனால் இவை அனைத்தையும் அசால்டாக செய்து, பல விருதுகளை வாங்கி குவித்தவர் பிரபல கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார்.

உடற்பயிற்சிகள் செய்து எப்போதும் தன்னுடைய உடலை செம்ம ஃபிட்டாக வைத்து கொள்வதில் இவரை மிஞ்ச  முடியாது. அதே போல்... இவருடைய படங்களில் பெரும்பாலும் டூப் போடாமல் நடித்து ஆக்ஷன் காட்சிகளில் அசத்துவார். 46 வயதிலும் 28 வயது நடிகர் போன்றே தோற்றம் அளிக்கும் இவர், இன்று காலை உடல்பயிற்சி கூடத்தில், பயிற்சி செய்து கொண்டிருந்த போது, திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அழைத்துவந்த போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புனித்ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியானதுமே, ரசிகர்கள் மருத்துவமனை முன் கூடினர். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட நிலயில், சற்று முன்னர் புனீத் ராஜ்குமாரின் மரணம் குறித்த தகவலை அடுத்தடுத்து பிரபலங்கள் வெளியிட்டு வந்தனர்.

இந்த தகவலை கேள்வி பட்டதுமே மருத்துவமனை முன் கூட்டம் அலை மோத துவங்கி விட்டது, ரசிகர்கள் பலர் கண்ணீரும்  உடல், மருத்துவமனையில் கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும், வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

திமிராக நடுவிரலை தூக்கிக் காட்டிய ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்... போலீஸுக்கு பறந்த புகார்
மலேசியாவில் அஜித்தை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்... கூட்டத்தின் நடுவே கூலாக AK செய்த சம்பவத்தை பாருங்க..!