
கன்னட திரையுலகின் பவர் ஸ்டார், நடிகர் புனித் ராஜ்குமார் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் இறந்துவிட்டதாக பெரியாகியுள்ள தகவல் திரையுலகினர் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனான புனித் ராஜ்குமார், ரசிகர்களால் பவர் ஸ்டார் என அன்போடு அழைக்கப்பட்டவர். சென்னையில் பிறந்து வளர்ந்த புனித் ராஜ்குமார், தன்னுடைய பெற்றோருக்கு 5 ஆவது மகனாக பிறந்தவர். 6 வயதில் மைசூருக்கு இவரது குடும்பம் குடிபெயர்ந்தது. இவரது தந்தை ஒரு நடிகர் என்பதால், கன்னட படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
குறிப்பாக 6 மாத குழந்தையாக இருக்கும் போதே திரைப்படங்களில் நடிக்க துவங்கி, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கர்னாடக ஸ்டேட் அவார்டு மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். பின்னர் முன்னணி ஹீரோவாகவும், அதிரடி ஆக்ஷன் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வரும் புனித் ராஜ்குமாருக்கு, மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சாண்டல்வுட் ரசிகர்களால் 'பவர் ஸ்டார்'ம் என அழைக்கப்படும் இவர் இன்று காலை, ஜிம்மில் உடல் பயிற்சியில் ஈடுபட்டபோது, திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து, பெங்களூரில் உள்ள 'விக்ரம்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக ஈசிஜி உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை செய்து வருவதாகவும், லேசான மாரடைப்பு காரணமாகவே புனித்ராஜ் குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ICU பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பெரிய அளவில் ஆபத்தில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக பிரபல நடிகை லட்சுமி மஞ்சு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ளார். தொடர்ந்து பல நடிகர், நடிகைகள் புனீத் ராஜ்குமார் மறைவுக்கு அஞ்சலி இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 46 வயதிலேயே புனித் ராஜ்குமார் மரணமடைந்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மருத்துவமனை முன்பு ரசிகர்கள் கூட்டம் கூட துவங்கி விட்டதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.