கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில்... சகோதரர் எல்வினுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் ராகவா லாரன்ஸ்!

Published : Oct 29, 2021, 12:45 PM IST
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில்... சகோதரர் எல்வினுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் ராகவா லாரன்ஸ்!

சுருக்கம்

இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் என திரையுலகில் பன்முக கலைஞராக வலம்  வரும் ராகவா லாரன்சின் (Raghava lawrence) பிறந்த நாளான இன்று, இவர் முதல் முறையாக சகோதரருடன் இணைந்து  நடிக்க உள்ள படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் என திரையுலகில் பன்முக கலைஞராக வலம்  வரும் ராகவா லாரன்சின் பிறந்த நாளான இன்று, இவர் முதல் முறையாக சகோதரருடன் இணைந்து  நடிக்க உள்ள படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: Breaking: 'அண்ணாத்த' படத்தை சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிட தடை..!

திரைப்படங்கள் நடிப்பது, சமூக சேவை என படு பிசியாக இருக்கும் ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன், அதிகாரம், துர்கா என மூன்று படங்களில் நடித்து வரும் நிலையில், இதை தொடர்ந்து இவர் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ள படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து விநியோகித்துள்ள, டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ஏ ஆர் என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி, பல வெற்றி படங்களை கொடுத்துள்ள இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இந்த படத்தை இயக்க உள்ளார்.

மேலும் செய்திகள்: சீரியல் நடிகையை கொலை செய்ய துடிக்கும் காதலனின் தந்தை..! முன்னாள் கணவர் போலீசில் பரபரப்பு புகார்..!

 

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில், இதுவரை நடித்திராத மாஸான சிறப்பு கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாகவும், ராகவா லாரன்சின்  உடன் பிறந்த சகோதரர், எல்வின் இந்த படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.  இப்படம் குறித்த அறிவிப்பு ராகவா லாரன்சின் பிறந்த நாளான இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே எல்வின் ராகவா லாரன்சுடன், ஒரு சில பாடல்களில் நடன காட்சிகளில் மட்டுமே வந்துள்ள நிலையில், இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

மேலும் செய்திகள்: 3 வாரத்திற்கு பின் ஷாருகான் முகத்தில் எட்டி பார்த்த புன்னகை! ஆர்யன் ஜாமீனை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்!

 

இப்படம் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் , கலகலப்பான காமெடி, மனதைத் தொடும் எமோஷன் என அனைத்தும் கலந்த கலவையாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம், கே எஸ் ரவிக்குமார், ராகவா லாரன்ஸ் மற்றும் எல்வின் முதல் முறையாக இணைகின்றனர். மேலும் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் என படக்குழு தெரிவித்துள்ளது. பலர் ராகவா லாரன்சுக்கு சமூக வலைத்தளம் மூலம் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

9-ல் 8 படங்கள் தோல்வி.. பான் இந்தியா ஸ்டார் தான் கடைசி நம்பிக்கை!
அபிராமிக்கு பதில் சாமுண்டீஸ்வரி செத்திருக்கலாம்! கதறி அழுத ரசிகர்கள் - சீரியல் குழுவை காரித் துப்பும் நெட்டிசன்கள்!