Breaking: 'அண்ணாத்த' படத்தை சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிட தடை..!

By manimegalai aFirst Published Oct 29, 2021, 12:10 PM IST
Highlights

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) நடிப்பில், வரும்  தீபாவளிக்கு வரவிருக்கும் 'அண்ணாத்த' (Annatthe) திரைப்படத்தை சட்டவிரோதமாக சமூகவலைதளங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், வரும்  தீபாவளிக்கு வரவிருக்கும் 'அண்ணாத்த' திரைப்படத்தை சட்டவிரோதமாக சமூகவலைதளங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் 'அண்ணாத்த'. 'காளையனாக' கிராமத்து ப்ரசிடெண்ட்டாக   சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து இருக்கும் இந்த படத்தை தல அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இயக்குனர் சிவா இயக்கியுள்ளார்.  ஏற்கனவே அஜித்தை வைத்து 'வீரம்' படத்தின் மூலம் தம்பி பாசத்தையும், 'வேதாளம்' படத்தின் மூலம் தங்கை பாசத்தையும் கண் முன் நிறுத்திய சிவா இந்த படத்தில் மீண்டும் தங்கை பாசத்தை கையில் எடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்: சீரியல் நடிகையை கொலை செய்ய துடிக்கும் காதலனின் தந்தை..! முன்னாள் கணவர் போலீசில் பரபரப்பு புகார்..!

இந்த படம் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகி, 'அண்ணாத்த' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக நேற்று முன் தினம் வெளியான, இந்தப் படத்தின் ட்ரைலர் 24 மணி நேரத்திற்குள் 6 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது. இதனை தலைவரின் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: சேலைக்குள் சோலையாய் புன்னகை பூத்த வாணி போஜன்!! சிகப்புச் சேலையில் கௌதமியை நினைவுபடுத்துறாங்களே!!

 

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நீண்ட இடைவெளிக்குப்பின் அவருடன் 90 களில் முன்னணி ஹீரோயின்களாக கலக்கிய நடிகை குஷ்பு மற்றும் மீனா ஆகியோர் நடித்துள்ளனர். ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷும், காதலியாக நயன்தாராவும் நடித்துள்ளார். இந்த படத்தை திரையரங்கில் பார்க்க பல ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தாலும், சமீபகாலமாக திரைப்படங்கள் வெளியான அன்றைய தினமே சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி, படங்களின் வசூலுக்கு வேட்டு வைத்து விடுகிறது.

மேலும் செய்திகள்: 3 வாரத்திற்கு பின் ஷாருகான் முகத்தில் எட்டி பார்த்த புன்னகை! ஆர்யன் ஜாமீனை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்!

 

இதனை கருத்தில் கொண்டு சன் பிச்சர்ஸ் தரப்பில் இருந்து, 'அண்ணாத்த' படத்தை சட்டவிரோதமாக வெளியிடகூடாது என இணையங்கள், மற்றும்  இணையதள சேவை, வழங்கும் நிறுவனங்களுக்கு எதிராகவழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், 'அண்ணாத்த' படத்தை சட்ட விரோதமாக வெளியிட எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

click me!