கல்யாண ஆசையை வெளிப்படுத்திய ரசிகர்..! குஷ்புவின் அதிர்ச்சி பதில்...? இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க..

By manimegalai aFirst Published Aug 23, 2021, 10:35 AM IST
Highlights

யங் லுக்கிற்கு மாறியுள்ள நடிகை குஷ்புவிடம் திருமண ஆசையை ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளிப்படுத்த, அந்த ரசிகருக்கு அதிர்ச்சி பதில் அளித்துள்ளார், நடிகை குஷ்பு. தற்போது இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

யங் லுக்கிற்கு மாறியுள்ள நடிகை குஷ்புவிடம் திருமண ஆசையை ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளிப்படுத்த, அந்த ரசிகருக்கு அதிர்ச்சி பதில் அளித்துள்ளார், நடிகை குஷ்பு. தற்போது இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகை குஷ்பு நேற்று முன் தினம், கருப்பு நிற மாடர்ன் டிரஸ் அணிந்து, சின்னத்தம்பி குஷ்பு போல் மாறிய சில ஸ்லிம் ஃபிட் புகைப்படங்களை வெளியிட்டார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை மட்டும் அல்ல திரையுலகினரையும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் இருந்தது. 20 வயது குறைந்து யங் லுக்கில் இருந்த இவரை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர். பலர் இந்த புகைப்படங்கள் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களா? என்று கூட கேள்வி எழுப்பினர். அந்த அளவிற்கு தன்னுடைய புதிய தோற்றதால் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் குஷ்பு.

சில ரசிகர்கள் நீங்கள் மீண்டும், கதாநாயகியாக நடிக்கலாம் என கூறினர். இப்படி பல கமெண்டுகளுக்கு மத்தியில் ஒரு குறும்புக்காரா ரசிகர், குஷ்புவின் நியூ லுக்கை பார்த்து, உங்களை திருமணம் செய்து கொள்ளலாமா? என கேட்டார். இதற்க்கு குஷ்புவின் மிகவும் ஜாலியாக..."நீங்கள் 21 வருடம் தாமதமாக இந்த கேள்வியை என்னிடம் கேட்டு உள்ளீர்கள். ஆனாலும் கவலைப்பட வேண்டாம், எனது கணவரிடம் ஒரு வார்த்தை இதைப் பற்றி பேசிவிட்டு பதில் சொல்கிறேன்’" என காமெடியாக பதில் கொடுத்துளளார்.  நடிகை குஷ்புவின் இந்த பதில் தான் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்திலும் நடித்து முடித்துள்ளார் குஷ்பு. இதில் ரஜினிக்கு குஷ்பு தான் ஜோடி என்றும், இல்லை வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுவரை குஷ்பு எப்படி பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மேலும் டி.வி. நிகழ்ச்சிகள், சினிமா, அரசியல் என படுபிசியாக இருந்தாலும் குஷ்பு பொறுப்பான குடும்பத் தலைவியாக தனது கடமைகளை தவறியதே கிடையாது. சோசியல் மீடியாவில் கூட கணவர் சுந்தர் சி, மகள்கள் அவந்திகா, அனந்திதா பற்றிய அப்டேடுகளையும், குடும்ப புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான். 


 

Oh oh.. sorry you are late. A little over 21 yrs late to be precise. But let me check with my husband anyways. 😂😂😂😂😂🥰 https://t.co/Naf3ixoaF8

— KhushbuSundar (@khushsundar)

click me!