சைடு பிசினஸில் களமிறங்கிய கீர்த்தி சுரேஷ்... என்ன தொழில் தெரியுமா?

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 22, 2021, 09:15 PM IST
சைடு பிசினஸில் களமிறங்கிய கீர்த்தி சுரேஷ்... என்ன தொழில் தெரியுமா?

சுருக்கம்

திரையுலகில் கொடிகட்டி பறந்தாலும் கீர்த்தி சுரேஷ் சைடு கேப்பில் புது பிசினஸ் ஒன்றையும் கையில் எடுத்துள்ளாராம். 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகையே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் எக்கச்சக்க ரசிகர்களைக் கொண்ட கீர்த்தி சுரேஷுக்கு ‘மகாநடி’ திரைப்படத்திற்கு தேசிய விருது மிகப்பெரிய கவன ஈர்ப்பாக அமைந்தது. திரையுலகில் கவர்ச்சி காட்டினால் தான் நடிகையாக நீடிக்க முடியும் என்பதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு கீர்த்தி சுரேஷ் தன்னுடைய அசத்தலான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாவுக்கு ஜோடியாக ‘சர்காரு வாரி பாட்டா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் ரக்ஷா பந்தன் நாளான இன்று ஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலோ சங்கரில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறார் என்பதையும் கீர்த்தி சுரேஷ் உறுதிபடுத்தியுள்ளார். அத்துடன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு குட்நியூஸையும் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். 

திரையுலகில் கொடிகட்டி பறந்தாலும் கீர்த்தி சுரேஷ் சைடு கேப்பில் புது பிசினஸ் ஒன்றையும் கையில் எடுத்துள்ளாராம். பூமித்ரா என்கிற அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் தொழில் துவங்கியிருப்பது குறித்து வீடியோ மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். அதில் கடந்த 4 மாதங்களாக தனது டீம் உடன் இயற்கையான அழகு சாதன பொருட்களை உருவாக்க உழைத்து வந்ததாகவும், ரோஸ், சந்தனம், ஏலக்காய், குங்குமப்பூ போன்ற இயற்கையான பொருட்களை கொண்டு அழகு சாதன பொருட்களை தயாரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பூமித்ரா  அழகு சாதன பொருட்கள் அனைத்துமே கெமிக்கல் மற்றும் தேவையில்லாத வேஸ்ட் இல்லாத, சுத்தமான ஆர்கானிக் பொருட்கள் என்பதையும் தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிங்கத்த பார்த்து ஷாக் ரியாக்‌ஷன் கொடுத்த சந்திரகலா அண்ட் சாமுண்டீஸ்வரி: கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!
கம்பீரமாக எண்ட்ரி கொடுத்த பாஸ் கார்த்திக்- சூடுபிடிக்க தொடங்கிய கார்த்திகை தீபம்; கொண்டாடும் ஃபேன்ஸ்!